Home செய்திகள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக மற்றும் எதிர்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக மற்றும் எதிர்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது

0
4

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக மற்றும் எதிர்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவர்க்கான பதவியை வகித்து வரும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதைதொடர்ந்து அவர் பதவி விலகுவதற்கு முன்பாக புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தலை நடத்தி தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஜூன் 15 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 29 இறுதி நாளாகும்.புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், ஆளும் பாஜகவும் எதிர்கட்சியினரும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். பாரதிய ஜனதா சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். இதை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவர் இத்தேர்தலில் வெற்றி பெற்றால் இப்பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமை கிடைக்கும்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக மற்றும் எதிர்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் பைதபோசி கிராமத்தில் 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு. சந்தால் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் ரைராங்பூர் சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக 2000 முதல் 2009 வரை பதவி வகித்தார். 2000-வது ஆண்டு மார்ச் 6 முதல் 2004 மே 16 வரை, பிஜு ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்தார்.

பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு மே 18-ம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் 2021-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி வரை அப்பதவியில் நீடித்தார்.

எதிர்கட்சிகளின் சார்பில் சரத் பவார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, திமுக எம்.பி. திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பிறகு புதிய குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பொது வேட்பாளராக யஷ்வந்சின்ஹா நியமிக்கப்பட்டார். பீஹாரைச் சேர்ந்த 84 வயதான யஷ்வந்த் சின்ஹா, ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். மத்திய அரசில் நிதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 2018-ல் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார். 2021 மார்ச்சில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.

அக்கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். எதிர்க்கட்சிகளின் நேற்றைய கூட்டத்துக்கு முன்பாக திரிணமூல் கட்சியில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகினார் என்பது குறிப்பிடத் தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here