டைமன்ட் லீக் போட்டியில் பதக்கம் முதல் இந்தியரானார் நிரஜ் சோப்ரா

0
12

டைமன்ட் லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரானார் நிரஜ் சோப்ரா.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதியில் இந்தியா சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா 88.44 மீ தூரம் ஈட்டி எறிந்து டைமண்ட் லீக் சாம்பியன் ஆனார். இது நீரஜ் சோப்ராவின் முதல் டைமண்ட் லீக் கோப்பை வெற்றியாகும். இந்தியாவுக்குக் கிடைத்த முதல் டைமண்ட் லீக் கோப்பையாகும்.

இந்த இறுதியில் சோப்ரா அதிர்ச்சிகரமாக ஃபவுலுடன் தொடங்கினார். மற்றவர்கள் முதல் முயற்சியில் நன்றாக வீச சோப்ரா பட்டியலில் கடைசியில் இருந்தார். ஆனால் 2வது முயற்சியில் சற்றும் மனம் தளராத சோப்ரா அனைவரையும் திகைக்க வைக்கும் 88.44 மீ தூரம் எறிந்து சாதனை புரிந்தார்.

மேலும் 3வது த்ரோவும் 88 மீ தூரம் சென்றது. இதனையடுத்து சோப்ராவுக்கு டைமண்ட் லீக் டிராபி கிடைத்தது. 4வது முயற்சியில் சோப்ரா 86.1 மீ தூரமே எறிந்தாலும் 3 த்ரோக்களில் வீசிய தூரத்தினால் வசதியாக முதலிடத்தில் நீடிக்க முடிந்தது.

டைமன்ட் லீக் போட்டியில் பதக்கம் முதல் இந்தியரானார் நிரஜ் சோப்ரா

சோப்ராவின் சவால் வீரர் வாட்லேயிச் 87 மீ தூரம் எறிய போராடினார், அவரால் கடைசி வரை 86.94 மீ தூரம் தான் எறிய முடிந்தது. சோப்ராவின் 5வது த்ரோவே வாட்லேயிச்சைத் தாண்டி 87 மீ தூரம் சென்றது. 5 முயற்சிகளில் சோப்ராவை அடித்துக் கொள்ள ஆளேயில்லை. டிராபியை வென்றார், இது மிகவும் மதிப்பு மிக்க டிராபி என்பது குறிப்பிடத்தக்கது, இதை வெல்ல சோப்ரா காயத்திலும் கடும் பயிற்சி மேற்கொண்டார், அவரது கடின உழைப்பு பலனளித்தது.

சோப்ரா ஒலிம்பிக்கில் டிராக் அண்ட் ஃபீல்ட் தங்கம் வென்ற முதல் இந்தியர், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் இப்போது டைமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here