2022 நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

0
3

2022 நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ இணையத்தளமான neet.nta.nic.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நடப்பு ஆண்டிற்கான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜுலை 17ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். முன்னதாக, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. எந்தெந்த நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான விவரங்கள் மட்டும் இதில் இடம் பெற்றிருக்கும்.

2022 நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை
2022 நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

விண்ணப்பதாரர்கள் (வழக்கம் – வழக்காறு/ கலாச்சாரம்/ சமயம்) சார்ந்து உணர்வோடு அணிந்து வரும் ஆடைகள் தொடர்பான விபரத்தை தேர்வு மையத்தில் இரண்டு மணிநேரம் முன்னதாக தெரிவிக்க வேண்டும். இருப்பினும், விண்ணப்பதாரர்கள் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் உள்ளிட்டவை) தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படாது. தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்களை யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்ட / குற்றவியல் ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை நீட் நுழைவு தேர்வுக்கான (NEET UG 2022) நுழைவு அட்டையை இன்று (ஜூலை 12) காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், NTA அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைவு தேர்வுக்கான அட்மிட் கார்டை வெளியிட்டுள்ளது. நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here