கேரளம் மாநிலத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் உள்ளாடைகளை அகற்றச் சொல்லி வற்புறுத்தல் காரணமாக ஓரு மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிந்து உள்ளார்.
நீட் தேர்வு நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 90 சதவீதம் பேர் இன்று தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வு தமிழ், இந்தி, ஆங்கிலம் என 13 மொழிகளில் நடைப்பெற்றது.
இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டும், மிகக் கடுமையான நெறிமுறைகளை தேர்வு முகமை பின்பற்றி வருகிறது.

தேர்வர்கள் தேர்வு மையத்தினுள் நுழையும் முன்பு உயர் உணர்திறன் கொண்ட உலோக உணர்வி பயன்படுத்தி விரிவான கட்டாய சோதனைக்ககு உட்படுத்தப்பட்டார்கள். அதே போன்று, மூடப்பட்ட அறையில் பெண் அலுவலர்களைக் கொண்டு பெண் தேர்வர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டார்கள்.
மேலும், பெண் தேர்வர்களை சோதனைகள் மேற்கொள்வதில் ஏற்படும் உணர்ச்சி சிக்கலை அறிந்து, விரிவான அறிவுரைகள் தேர்வு மையத்தில் சோதனையில் ஈடுபடும் பெண் அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், கேரளம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையம் ஓன்றில் உள்ளாடைகளில் உலோக ஹூக் இருப்பதாகச் சொல்லி உள்ளாடைகளை அகற்றச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஓரு அறையில் குவியாலாக உள்ளாடைகளைப் போட்டுள்ளனர். பல மாதங்களாக படித்தும் இது போன்ற காரணங்களால் மனரீதீயாக பாதிக்கப்பட்டு சரியாக தேர்வு எழுத முடியவில்லை என ஓரு மாணவி அழுது கொண்டே வந்துள்ளார். அம்மாணவியின் தந்தை இதனை போலீசில் புகார் அளித்துள்ளார்.