நெல்லை அகஸ்த்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு

0
28

நெல்லை அகஸ்த்தியர் மலை தமிழகத்தின் 5வது யானைகள் காப்பகமாக ஓன்றிய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்த்தியர் மலை 1,197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள அகத்தியர் மலை தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று உலக யானைகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், நெல்லை அகத்தியர் மலையை யானையை காப்பகமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு பெருவில் நடந்த நிகழ்ச்சியில்ல் அகஸ்தியர் மலை பகுதி உயிர்கோள் காப்பக பகுதியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அகஸ்தியர் மலை பகுதி உயிர்கோள் காப்பக பகுதியாக யுனெஸ்கோ அறிவித்திருந்தது.

நெல்லை அகஸ்த்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு

தமிழகத்தில் ஏற்கனவே 4 யானைகள் காப்பகம் உள்ள நிலையில் 5வதாக அகஸ்த்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யானைகளின் பாதுகாப்பிற்காக யானைகள் திட்டம் இந்திய அரசால் 1992 ல் கொண்டு வரப்பட்டது. யானைகளின் வாழ்வினை மேம்படுத்தவும் யானைகள் மோதலை குறைக்கவும் மனிதர்கள் வேட்டையாடுவதை தடுக்கவும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் இதுரை 32 யானைகள் காப்பகம் உள்ளது. தமிழகத்தில மட்டும் அகஸ்தியர் மலையை சேர்த்து 5 ஆகும்.

  1. நீலகிரி யானைகள் காப்பகம்.
  2. நிலாம்பூர் யானைகள் காப்பகம்.
  3. ஸ்ரீவில்லிப்புத்தூர் யானைகள் காப்பகம்.
  4. ஆனைமலை யானைகள் காப்பகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here