துணிவு படத்தின் OTT ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்ஃப்ளிக்ஸ்

0
4

துணிவு திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலிலும் வாரிய குவித்தது. தற்போது, இப்படத்தின் ஓடிடி உரிமத்தை பெற்றுள்ள நெட்ஃப்ளிக்ஸ் OTT யில் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட துணிவு திரைப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இதுவரை 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையில் வெளியாகிய பாடல்கள் அனைத்தும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தயாரிப்பு பணிகளை கவனித்து வந்த போனிக்கபூர் இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு இந்திய படங்களிலேயே முதல் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹலோகிராம் மூலம் டிரைலரை வெளியிட்டார். மேலும், வானில் பறந்தப்படி துணிவு படத்தின் விளம்பர் செய்யப்பட்டடு மிக பிரம்மாண்டமான முறையில் படம் வெளியிடப்பட்டது.

முழுக்க முழுக்க சாமினியனின் வங்கி கணக்கின் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி உருவான படமாக இருக்கிறது. இதில் மிக மாஸான கதாநாயகனாக அஜித் நடித்திருப்பார். இவருடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், அமீர், சிபிசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் அஜித் மைக்கேல் ஜாக்சன் டான்ஸ் ஆடியிருப்பார் அந்த நிமிடங்களை ரசிகர்கள் மிகுந்த ஆராவரத்துடன் மகிழ்ந்து படத்தை பார்த்து ரசித்தனர்.

நடிகர் அஜித் ரசிகர்களுக்கு முற்றிலும் இப்படம் மாஸ் படமாக அமைந்து மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து அஜித் அடுத்த 62 வது படத்தின் பணிகளில் மும்பரமாக ஈடுப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் இப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ள நிலையில் இப்படத்தின் ஓடிடியில் வெளியிடும் தேதியை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம். அதில் வருகிற பிப்ரவரி 8ந் தேதி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: தளபதி 67 படத்தில் இணைந்த மெகா நடிகர்கள் முழு விவரம்

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here