தமிழ் திரைப்படங்களின் ஓடிடி உரிமையை வாங்கி தென்னிந்தியாவில் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்த இந்த ஆண்டு 18 தமிழ் படங்களின் உரிமையை வாங்கி அசத்தியுள்ளது.
உலகளவில் மிகப் பெரிய ஓடிடி தளமாக உள்ள நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது தென்னிந்திய திரைப்படங்களின் படங்களையும் வாங்கி தனது ஆதிக்கத்தை நிலை நிலை நிறுத்த திட்டமிட்டு இந்தாண்டு 18 தமிழ் படங்களை வாங்கி வெளியிட உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன் ஓடிடி பயணர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. பெருந்தொற்றுக்கு பின் ஓடிடி பயணர்களின் எண்ணிக்கை அனைத்து ஓடிடி தளங்களிலும் அதிகரித்தது.
ஓடிடியை பொறுத்தளவில் திரைப்படங்கள் தொடங்கி வெப் சீரிஸ்கள் வரை விளையாட்டு போட்டிகளை நேரலையாக ஸ்ட்ரீம் செய்வது தொடங்கி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வரை அனைத்தையும் உள்ளிடக்கிய தொழில்நுட்ப வளர்ச்சியாக ஓடிடி வளர்ந்து நிற்கிறது.

இந்தியாவில் அமெசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ், சோனிலைவ் போன்ற ஓடிடி தளங்களிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியவில் பயணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வண்ணம் நெட்ஃபிலிக்ஸில் வெளியான ‘பீஸ்ட்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘டாக்டர்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நிலையில், அடுத்து என்னென்ன படங்கள் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்த நிலையில் இந்தாண்டு வெளியாகும் 18 தமிழ் படங்களின் ஓடிடி தளத்தின் உரிமையை பெற்று அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அந்த பட்டியலில் அஜித்குமாரின் ஏகே 62, இறைவன், இறுகப்பற்று, ஆர்யன், சந்திரமுகி 2, நாய் சேகர் ரிட்டன், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான், ரிவால்டர் ரீட்டா, மாமன்னன், தங்கலான், தலை கோதல், வாத்தி, வரலாறு முக்கியம் உள்ளிட்ட முக்கிய படங்களின் வெளியீட்டு உரிமையை பெற்று உள்ளது.
இதையும் படியுங்கள்: ஜெயிலர் திரைப்படத்தில் இன்னொரு வில்லனாக இணைந்த தெலுங்கு நடிகர்
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.