சச்சின் டெண்டுல்கரின் பேக் டைரைவை டிரன்டிங் செய்து வருகின்றனர் இணையவாசிகள். சாலை பாதுகாப்பு உலக தொடரை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு அவர் அடித்த ஷாட் ஒன்று தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கிரிக்கெட்டிலிருந்து டெண்டுல்கர் விடைபெற்று ஆனால், அவரின் அபாரமான விளையாட்டு இன்றும் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி வருகிறது. பல சாதனைகளுக்கு சொந்தகாரராக இருந்து வந்தவர். இந்திய அணியின் நட்சத்திர விரராக திகழ்ந்தவர். அனைவருக்கும் கிரிக்கெட் என்றால் இப்போது தோனி, கோலி என்பது போல அன்று டெண்டுல்கர் தான் மாஸ்டர்.
இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.

நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய லெஜண்ட்ஸ் அபார வெற்றியை பெற்றது. அப்போட்டியில், ஸ்டூவர்ட் பின்னி 24 பந்துகளில் 82 ரன்களை குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதையும் கவனியுங்கள்: IND VS AUS T20 2022: இன்று தொடங்கும் போட்டி குறித்து சிறப்பு தகவல்கள்
தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 217 ரன்களை குவித்தது. மேலும், அடுத்த ஆடிய தென்னாப்பிரிக்கா 156 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மேலும், இந்தியா – மே.இ. தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடந்த நியுசிலாந்து மற்றும் இந்திய அணிக்கும் போட்டி நடைப்பெற்றது. அதில் சச்சின் டெண்டுல்கர் அடித்த பேக் டிரைவை மற்றும் அவரின் ஷாட்களை பார்த்த இணையவாசிகள் அதனை டிரன்டிங் செய்து வருகின்றனர். தனது 49 வயதிலும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார் என்று அவரின் ரசிகர்கள் அவரை புகழந்து வருகின்றனர்.