தயாரிப்பாளர் தில்ராஜூவால் உருவாகி வரும் திரைப்படம் நடிகர் விஜயின் வாரிசு இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் வருகிற புதிய ஆண்டில் பொங்கலுக்கு ரிலிசாகிறது.
வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி உருவாக்கியுள்ளார். இப்படத்தின் முதல் சிங்கில் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே வைரலாகி அனைவரையும் கவர்ந்தது. பின்னர், சிலம்பரசன் குரலில் பாடிய தீ தளபதி என்ற பாடல் வைராலகியது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் மந்தனா, நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.
அதே பொங்கல் திருவிழாவிற்கு அஜித்குமாரின் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், துணிவு பட விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் துணிவு படத்திற்கே அதிக தியேட்டர்கள் ஓதுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வந்தது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு மீடியாவிற்கு பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், தமிழகத்தில் நடிகர் அஜித்தை விட விஜய் முன்னிலையில் இருக்கிறார். இது வியாபாரம். இரண்டு படங்களுக்கும் சம எண்ணிக்கையிலான திரையரங்கம் என்பது ஏற்க முடியாது.
இது குறித்து பேச தான் நான் சென்னைக்கு செல்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதனை அடுத்து இவர் இன்று காலை சென்னைக்கு வந்து உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையும் படியுங்கள்: இந்தியா முழுவதும் பைக்கில் வலம் வந்து முடித்துள்ளார் நடிகர் அஜித்
சினிமா துறையில் ரஜினி கமல் போன்று இப்போது விஜய் அஜித் இருவருக்கும் சரிசமமான ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே. அதை முன்னிலைப்படுத்தியே இவ்விரு படங்களுக்கும் சரிசமமான திரையரங்குகள் ஓதுக்கப்பட்டது. ஆனால், தில்ராஜூ இதில் தலையிட்டு குட்டையை குழப்பி வருவதை அஜித் ரசிகர்கள் அவரை சமூக வலைதளம் வாயிலாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.