புதியதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் ஓரு மாதத்திற்கு முன்னதாகவே அப்பத்திரிக்கையை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைத்தால் திருமண தினத்தன்று திருப்பதி ஏழுமலையானின் ஆசிப் பெற்ற பிரசாதம் மற்றும் சில மங்களப் பொருட்களுடன் வீடு தேடி வந்து சேரும் என்ற புதிய அறிவிப்பை தேவஸ்தானம் அளித்துள்ளது.
இந்து மத கோவில்களில் வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக காணப்படும் திருப்பதி ஏழுமலையானின் தரிசனத்திற்கு உள்நாடு மற்றும் அன்றி வெளிநாட்டு பக்தர்களும் வந்து தரிசனம் மேற்கொள்வர். இந்த கோவிலில் வருடத்தின் 365 நாட்களும் மக்கள் வெல்லம் அதிகரித்தே காணப்படும்.
அதிலும் விழாக் காலங்களில் எண்ணில் அடங்கா பக்தர்கள் வந்து வெங்கடாஜலபதி பெருமானை தரிசனம் செய்து வழிபடுவர். தேவஸ்தானத்திற்கு இதன் மூலம் உண்டியல் மற்றும் இதர வழிகளில் பல கோடி ரூபாய் அளவில் தினமும் வந்து கொண்டுள்ளது. இதனாலேயே இக்கடவுளை பணக்கார கடவுள் என்று கூறுவதுண்டு.

இதனிடையே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதில் முக்கியமானதாக ஜனவரி 2 ம் தேதி துவங்கி, ஜனவரி 11 ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக திருப்பதி கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கு பெறும் வகையில் இலவச டிக்கட் முக்கிய அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, புதியதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு ஏழுமலையானின் ஆசிர்வாதம் மற்றும் பிரசாதம் கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் திருமணப் பத்திரிக்கையை ஓரு மாதத்திற்கு முன்னதாகவே தேவஸ்தானத்திற்கு அனுப்பினால் திருமணத்தன்று வீடு தேடி திருப்பதி வெங்கடாஜலதியின் ஆசிர்வாத பிரசாதம் மற்றும் சில முக்கிய மங்களப் பொருட்களும் கிடைக்கும் என்ற புதிய அறிவிப்பை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் குப்பையை அகற்றி தூய்மைபடுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.