தமிழகத்தில் இன்று முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலாகிறது

0
7

தமிழகத்தில் இன்று முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலாகிறது. தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கு மின்சார ஓழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து இன்று முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலாகிறது. 2026-2027 ஆம் ஆண்டு வரை புதிய கட்டணம் அமலில் இருக்கும் என மின்சார ஓழங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்து 8 ஆண்டுகளுக்கு பின் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டு உபயோகத்திற்கு வழங்கப்படும் விலையில்லா இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மின்துரை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மின்கட்டணம் உயர்வு குறித்து முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, “ 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும், உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலாகிறது

இதேபோல, 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கட்டண உயர்வு தொடர்பாக 30 நாட்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பொது மக்கள், தொழில் நிறுவனங்கள், கடை நடத்துபவர்கள் என ஏராலமானவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எதிர்கட்சி தலைவர்கள் மட்டும் இன்றி பல அரசியல் தலைவர்களும் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அன்றாட தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here