நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் புதிய அப்டேட்

0
12

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் இறுதியாக நடித்த படம் பீஸ்ட் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வெற்றி பெற்றது. விஜய் ரசிகர்களுக்கு பெரு விருந்தாகவும் அமைந்தது. இப்படத்தை நெல்சன் தீலிப் குமார் இயக்கியிருந்தார். இவருடன் பூஜாஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர்.

தற்போது, தெலுங்கு இயக்குனருடன் இணைந்துள்ள படம் வாரிசு இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரீலிஸ் ஆகிறது. அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாவதால் தலதளபதி பொங்கலாக ரசிகர்களுக்கு மாறியுள்ளது.

இயக்குனர் வம்சி நல்ல கதை தளத்தில் நடிகர் விஜயை நடிக்க செய்துள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்திற்கு தமண் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக வாரிசு படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். வாரிசு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் புதிய அப்டேட்

சமீபத்தில் பேட்டி அளித்திருந்த வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி, படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் வந்திருப்பதாகவும், ஃபேன் பாய் போன்று தமன் பாடல்களை கம்போஸ் செய்திருப்பதாகவும் கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு உரிமத்தை இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டி – சீரிஸ் (T-Series) கைப்பற்றியுள்ளது.

இந்தியாவிலேயே அதிக ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ள டி சீரியஸ் நிறுவனம் இப்படத்தின் பாடல்கள் உரிமையை பெற்றுள்ளது விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here