உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடர்ந்து நான்காவது முறையாக இடம் பெற்றிருப்பதை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த பணக்காரர்கள், தலைசிறந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் நான்காவது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றிருக்கின்றார்.
ஐரோப்பிய கமிஷனின் தலைவரான ஊர்சுலா வாண்டர் லியன் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லக்ராட் இரண்டாவது இடத்தையும், அமெரிக்க துறை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய அளவில் முதல் இடத்திலும் சர்வதேச அளவில் 36ஆவது இடத்திலும் நிர்மலா சீதாராமன் உள்ளார்.

சமூகத்தில் மக்கள் செல்வாக்கு, உயரந்த செல்வாக்கு, சமூகத்தின் தாக்கம், ஊடகத்தில் அவருக்கு மதிப்பு என அனைத்தையும் பின்பற்றி பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை இந்த பட்டியலை அறிவித்துள்ளது.
இந்தாண்டுக்கான 100 பெண்கள் பட்டியலில் இந்தியாவில் ஆறு பேரின் பெயரை தெரிவித்துள்ளது. இந்திய அளவில் நிர்மலா சீதாராமன் முதல் இடத்தையும் தொடர்ந்து ரோஷினி, கிரண்மஜூம்தார், பல்குனி இந்த மூவரும் இரண்டாவது முறையாக இடம் பிடித்துள்ளனர்.
நிர்மலா சீதாராமனை சேர்த்து 6 இந்திய பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். நிர்மலா சீதாராமனை போலவே எச்சிஎல் (HCL) நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் 53 இடத்தையும், செபி தலைவர் மாதபி புரி 54 இடத்திலும் உள்ளனர். இவர்களைப் போலவே, இந்திய ஸ்டீல் ஆணையத்தின் தலைவர் சோமா மொண்டல் 67 இடத்திலும், பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார் ஷா 72 இடத்திலும், Nykaa நிறுவனத்தின் தலைவர் பல்குனி சஞ்சய் நய்யார் 89ஆவது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்: குஜராத் தேர்தல்: ஜடேஜாவின் மனைவி ரிவபாமுன்னிலை பெற்று வருகிறார்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.