நித்தியின் கைலாசா நாட்டை அஙகீகரித்த அமெரிக்கா

0
9

நித்தியின் கைலாசா நாட்டை அஙகீகரித்த அமெரிக்காவின் நெவார்க் நகரம் தனி நாடாக அங்கீகரித்து இருதரப்பு மக்களின் வளர்ச்சிக்கும் திட்டங்களுக்கும் ஓப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்கு பெயர் போன நித்தியானந்தா மீம்ஸ் கிரியேட்டருக்கு பெரிதும் பேசப்படும் பெயராக இருந்து பல கண்டண்டுகளுக்கும் தலைவராக இருந்தார். பாலியல் வழக்கில் 2018ம் ஆண்டு சிக்கி காவல் துறையினரால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். இதனால் நாடு தாண்டி ஓரு தீவில் அமரந்து கொண்டு இது என் நாடு இந்த நாட்டின் பெயர் கைலாசா இந்த கைலாச நாட்டிற்கு நான் தான் அதிபர் என்றும் அதிரடியாக அறிவித்து சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்து வந்தார். இது இந்துக்களின் புனித பூமியாக இருக்கும் என்றும் கூறிவந்தார்.

தொடர்ந்து கைலாசா நாட்டிற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும் இந்த நாட்டிற்கு குடி உரிமை வரவேற்கப்படுகிறது என்றும் அறிவித்து அலப்பறை செய்து வந்தார் நித்தியானந்தா. கைலாசா நாட்டிற்கு பணியாட்கள் தேவை என்றும் சமூகவலைத்தளங்களில் கூறினார். சில மாதங்களுக்கு முன் கைலாசா நகரத்தின் கைலாசா முத்திரைப் பதித்த காயினை வெளியிட்டார்.

நித்தியின் கைலாசா நாட்டை அஙகீகரித்த அமெரிக்கா

இந்தியாவில் பல வழக்குகள் இருப்பதால் நித்தியால் இங்கு வரமுடியவில்லை. சில மாதங்களுக்கு முன் இலங்கை அதிபருக்கு கடிதம் மூலம் நித்தியின் சீடர் ஓரு கடிதம் அனுப்பினார் அதில் நித்தியானந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை அதனால் உங்கள் நாட்டில் அவருக்கு மருத்துவ உதவிகளை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனிநாடு கோரி நித்யானந்தா ஐ.நா சபையிடம் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்கா நகரம் கைலாசா நாட்டிற்கு அங்கிகாரம் வழங்கியுள்ளதாக தனது டிவிட்டர் கணக்கின் மூலம் அறிவித்துள்ளார். கைலாசாவை இறையாண்மைப் பெற்ற நாடாக அங்கீகரித்துள்ள நெவார்க், இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி தொற்றுநோய், சிக்கலான மனநலப் பிரச்சனைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு இரு நகரங்களும் சேர்ந்து தீர்வு காணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா, நெவார்க் நகர மேயர் பராக்கா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதையும் படியுங்கள்: நித்தியின் அடுத்த அதிரடி கைலாசா நாட்டிற்கு பணிக்கு ஆட்கள் தேவை

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here