நித்தியின் அடுத்த அதிரடி கைலாசா நாட்டிற்கு பணிக்கு ஆட்கள் தேவை

0
21

நித்தியின் அடுத்த அதிரடி கைலாசா நாட்டிற்கு பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு ஓன்றை வெளியிட்டுள்ளார். இதனால், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த கோபமும் வேதனையும் அடைந்துள்ளனர்.

நித்தியாநந்தா சர்ச்சைக்கும் பல குற்றச்சாட்டுக்கும் பெயர் போனவர். பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இன்று இருந்து வருபவர். முதன் முதலில் வார இதழில் வெளியான கதவை திற காற்று வரட்டும் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். அத்தொடரில் அவரின் பெயர் ஸ்ரீபரமஹம்ச ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள் என்பதாகும்.

தொடர்ந்து 7 ஆண்டுகள் வரை வார இதழில் புகைப்படத்துடன் கூடிய பல இந்துத்துவ கொள்கைகளை போதித்து வந்தார். இது நூல்களாகவும் வெளியாகின. பின் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் நிலங்களையும் பணங்களையும் வாரி குவித்து பல நித்தியானந்தா ஆசிரமத்தையும் நடத்தி வந்தார்.

2010 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள அவரது ஆசிரமத்தில் அவரின் காம சித்து விளையாட்டுகள் அரங்கேறியதை உலகமெங்கும் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. இதனால் அவர் மீது பலாத்கார குற்றங்கள், ஆட்கடத்தல் வழக்கு, நில மோசடி வழக்கு என பல கிரிம்னல் வழக்குகளில் சிக்கினார். வழக்குகளிலிருந்தும் கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க பல இடங்களுக்கு ஓடி ஓலிந்தார்.

நித்தியின் அடுத்த அதிரடி கைலாசா நாட்டிற்கு பணிக்கு ஆட்கள் தேவை

இறுதியாக கர்நாடக போலீசார் அவரை சிறையில் அமர்த்தினர். கர்நாடகாவில் இருக்கும் அவரின் மடமும் மூடப்பட்டது. பின் 2012 ம் ஆண்டு மதுரை ஆதினம் அவரை ஆதின தலைவராக அறிவித்தது. பல எதிர்ப்புகள் வரவே அது நிராகரிக்கப்பட்டது.

மேலும், மீம் கிரியேட்டர்களுக்கு பல வழிகளில் உதவியுள்ளார். இவரின் புகைப்படத்தை போட்டு ட்ரோல் செய்வது என்று நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வந்தது. தீடீரென கைலாசா என்ற தீவை வாங்கியுள்ளேன் அந்த நாட்டிற்கு அதிபராக தன்னை நியமித்துள்ளேன் எனக் கூறி அறிவிப்பு ஓன்றையும் வெளியிட்டு பரப்பரப்பானார்.

அதோடு நில்லாம்ல் அந்த நாட்டை நிர்வகிக்க போகும் அமைச்சர்கள் குறித்த அறிவிப்பு மற்றும் புதிய நாணயங்களையும் வெளியிட்டு பரப்பரப்புக்கு உள்ளாக்கினார். யூடிப் மூலம் மட்டுமே தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார் நித்தி. சமீபத்தில் இலங்கை அதிபரிடம் கடிதம் ஓன்றை அனுப்பியிருந்தார்.

அதில் நித்யானந்தாவிற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்றது அவரை உடனே அனுமதித்து அவரின் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று அவரின் அமைச்சர் கடிதம் ஓன்றை வெளியிட்டு இருந்தார். அதை இலங்கை அரசும் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று கைலாசா நாட்டிற்கு பணிக்கு ஆட்கள் தேவை என்றும் அவருக்கு ஓரு வருடப் பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான சம்பாவனையும் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு ஓன்றை வெளியிட்டு வந்துள்ளார். இந்த தகவலை பார்த்த பலரும் இவன் அடங்கவே மாட்டிங்கிறான் என்று கூறி வருகின்றனர்.

இது போன்ற பல தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here