மூன்று வித ஐசிசி கோப்பையை தோனியை தவிர எந்த கேப்டனாலும் வெல்ல முடியாது-காம்பீர்

0
6

மூன்று வித ஐசிசி கோப்பையை தோனியை தவிர எந்த கேப்டனாலும் வெல்ல முடியாது தோனியை தவிர என்று முன்னாள் கிரிக்கெட் வீரரமும் பாஜக எபியுமான கௌதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாரதிய ஜனதா எம்பியுமான கௌதம் காம்பீர் இந்திய கிரிக்கெட் அணியினர் பற்றி கருத்துகளை பகிரங்கமாக வெளிபடுத்துபவர் மற்றும் அறிவுரை வழங்குபவர். இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள தயாராகும் போதும் இந்திய அணிக்கு அறிவுரை வழங்கினார். அதாவது, இந்திய அணியினர் பாகிஸ்தான் அணியின் வேகபந்து வீ்ச்சாளரான ஷாகின் அப்ரிடியை எதிர்கொள்ள அட்வைஸ் வழங்கி இருந்தார்.

பின்னர், இங்கிலாந்துடனான அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணிக்கு அப்போதும் அறிவுரை கூறினார். அரையிறுதி வரை சென்றாலும் இந்திய அணிக்கு மிகப் பெரிய பிரச்சனை இருக்கின்றது லெக் ஸ்பினரை இந்திய அணி இறக்கி விடாமல் வைத்திருப்பது பற்றி பேசியிருந்தார்.

மூன்று வித ஐசிசி கோப்பையை தோனியை தவிர எந்த கேப்டனாலும் வெல்ல முடியாது-காம்பீர்

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது இதனால் பல முன்னாள் வீரர்களும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்: விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அப்போது, கௌதம் காம்பீர் கூறுகையில், யாராவது வந்து ரோஹூத்தின் இரட்டை சதங்களை அடிக்க முடியும் கோலியை விட அதிக சதங்களையும் அதிக ரன்களையும் அடிக்க முடியும். ஆனால், 3 வித ஐசிசி தொடரை கைப்பற்றிய தோனி கேப்டன் சியை போல எந்த இந்திய கேப்டனாலும் வெல்ல முடியாது என்று நினைக்கிறேன் என்று ஊடகத்தின் வாயிலாக தெரிவித்திருந்தார்.

தோனி தலைமையிலான இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகிய 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அதில், 2007 டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் கவுதம் கம்பீர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here