இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் பெற்றார் நார்வேயில் நடைப்பெற்று வரும் செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் தமிழகத்தை சார்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமையை தந்துள்ளார்.
பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தையும், 2-வது இடத்தை இஸ்ரேல் வீரர் ஐஎம் மார்செல் ப்ரோம்ஸ்கி, 3-வது இடத்தை ஸ்வீடன் வீரர் ஜங் மின் சியோ பெற்றனர். இந்திய வீரர் பிரணீத்6 புள்ளிகள் பெற்று 3-வது இடம் வந்தபோதிலும் டைபிரேக்கரில் ஸ்கோர் செய்யாததால் 6-வது இடம் சென்றார்.

இந்தப் போட்டியில் பிரணீத்தைத் தவிர்த்து, பிரக்ஞானந்தா, 8-வது சுற்றில் விக்டர் மிக்ஹால்வ்ஸ்கி, 6வது சுற்றில் விடாலி குகின், 4-வது சுற்றில் முகம்மதுஜோகித் சுயராவ், 2-வது சுற்றில் சிமென் முட்சோவ், முதல் சுற்றில் மத்தியாஸ் உன்னேலேண்ட் ஆகியோரை வீழ்த்தினார். 3 போட்டிகளை பிரக்ஞானந்தா டிரா செய்தார்.
16 வயதே ஆன பிரக்ஞானந்தா இந்த சீசன் முழுவதும் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தன் பதினோராம் வகுப்பு பள்ளி படிப்பிலும் கவனம் செலுத்தி விளையாட்டிலும் தடம் பதித்து சாதனை புரிந்து வருகிறார்.
சாம்பியன் ஆனவுடன் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “இந்தத் தொடரில் என் ஆட்டத்தின் தரம் உயர்ந்ததாக இருந்தது. ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் திட்டமிட்டபடி காய்களை நகர்த்த முடிந்தது. இது எனக்கு திருப்தி அளித்தது” என்றார்.
இச்சிறு வயதில் உலக சாம்பியன்களுடன் மோதியுள்ளார். சமீபத்தில் கால்சனை வென்றார். இறுதியில் சீன வீராரான டங்லிரனிடம் தோல்வியுற்றார். பெரிய நபர்களுடன் மோதுவது அவருக்கு பெரிய பயனை அளிக்கும். அதன் வழியே நூணுக்கல் பலவற்றை அறிய முடியும் என தன் நம்பிக்கையுடன் இருக்கிறார் பிரக்ஞானந்தா.
சென்னையில் அடுத்த மாதம் நடக்க உள்ள செஸ் ஓலிம்பியாட் போட்டியில் பங்கு பெற்று பி அணியில் விளையாடவுள்ளார்.