ஷாருக்கானின் ‘பதான்’ அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.

0
3

பதான்: சிறிய இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ‘பதான்’. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். ஜான் ஆபிரஹாம் உள்பட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். பான் இந்தியா படமான இதை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படத்தில் பாடல் காட்சியில் இடம் பெற்ற சில சீன்களால் இப்படம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. கடும் எதிர்ப்புகளையும், கண்டனத்தையும் தாண்டி இந்த படம் கடந்த ஜனவரி 25ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள 8,000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரும் வசூல் சாதனையும் படைத்தது.

pathaan now streaming on amazon prime video

இந்த படம் வெளியான நாளிலிருந்து இந்தியாவில் 629 கோடியும், வெளிநாடுகளில் 380 கோடியும் மொத்தமாக 1009 கோடியும் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது ஷாருக்கான் அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘பதான்’ படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here