நடிகர் விஜயின் படங்கள் கடந்து வந்த தடைகள் மற்றும் சிக்கல்கள்

0
22

நடிகர் விஜயின் படங்கள் பலமுறை தடைகளையும் சிக்கல்களையும் தாண்டி வந்து பெரிய வெற்றியை குவித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் எந்த எந்த விஜய் படங்கள் எது போன்ற பிரச்சனைகளை கடந்து வந்தது என்பதை இப்பதிவில் காண்போம்.

முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் இவரின் படங்கள் பலமுறை பலவித சிக்கல்களையும் தடைகளையும் கடந்து வெளியாகி உள்ளது. தற்போது, வாரிசு திரைப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகள் போல சிக்கல்கள் அவ்வபோது தோன்றி பின் தீர்வு காணப்பட்டு வெளியிடப்படும்.

நடிகர் விஜயின் படங்கள் கடந்து வந்த தடைகள் மற்றும் சிக்கல்கள்

நடிகர் விஜய் படங்கள் சந்தித்து வந்த தடைகள் மற்றும் சிக்கல்கள்:

  • 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புதிய கீதை இப்படத்திற்கு முதலாவதாக கீதை என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த படத்தின் பெயருக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த இந்து அமைப்பு அதற்காக புதிய கீதை என்று பெயர் மாற்றப்பட்டு வெளியானது.
  • 2011 ஆம் ஆண்டு வெளியான காவலன் திரைப்படம் வெளியாகும் போது சுறா படத்தில் ஏற்பட்ட நஷ்ட ஈடு தொகையை விஜய் கொடுத்ததால் காவலன் திரைப்படம் வெளியிடப்பட்டது.
  • 2012 ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன் இப்படத்தின் பெயரை மாற்றக்கோரி கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் வழக்கு தொடுத்திருந்தனர்.
  • 2013 ஆன் ஆண்டு வெளியாகி மிகப் பெரும் வெற்றியை தந்த திரைப்பட்ம தலைவா இப்படம் வெளியானால் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு வைக்கப்படும் என்ற மர்ம கடிதம் அரசுக்கு வந்துள்ளதாக தடை விதிக்கப்பட்டது. பின்பு, டை டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டு படம் 11 நாட்கள் கழித்து வெளியிடப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் கத்தி இப்படம் ராஜபக்ஷவின் நெருக்கமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பு என கூறி இப்படத்தின் வெளியீட்டுக்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.
  • 2015 ஆம் ஆண்டு புலி படத்தின் வெளியீட்டு தினத்தன்று இப்படத்தின் நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டில் ஈடுப்பட்டனர். இதனால் காலை முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு பின் தாமதமாக வெளியிடப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டு தெறி வெளியீட்டின் போது தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்களுக்கும் இடையே பிரச்சனை இதனை தாண்டி வெளியாகி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது இப்படம்.
  • 2017 ஆம் ஆண்டு மெர்சல் படம் வெளியாவதற்கு முதல் நாள் வரை சென்சார் சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் ஏற்படுத்தியது பாஜக அரசு. விஜய் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றி பேசிய விவகாரத்தால் கடும் எதிர்ப்பால் பிரச்சனைகளை சந்தித்தது.

  • 2018 ஆம் ஆண்டு சர்க்கார் படத்தின் கதை என் கதை தழுவல் எனக் கூறி வருண் ராஜேந்திரன் வழக்கு தொடுத்திருந்தார்.
  • 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்தின் போஸ்டரில் விஜய் இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்திருந்ததாக கூறி வியாபாரிகள் நலச் சங்கத்தினர் கண்டனம் செய்தனர்.
  • 2021 ஆம் ஆண்டு மாஸ்டர் படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள சுரங்கத்தில் படப்பிடிப்பு நடந்த போது விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது.
  • 2022 ஆம் ஆண்டு பீஸ்ட் ஏப் 14ம் தேதி வெளியாகும் என்று தகவல் வந்த நிலையில் அன்று கேஜிஎப் வெளியாவதால் முன்னதாகவே ஏப்13 ம் தேதி வெளியாகியது.
  • 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு திரைப்படம் தெலுங்கில் பிரச்சனைகளை சந்தித்து தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற பிரச்சனைகளை விஜயின் படங்கள் கடந்து பல வெற்றிகளை குவித்து வருவது சகஜம். தொடர்ந்து பல விஜய் படங்கள் சிக்கல்களையும் தடைகளையும் கடந்தே வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்: விஜயின் வாரிசு திரைப்படம் தெலுங்கிலும் பொங்கலுக்கு வெளியாகிறது

இது போன்ற பலவித தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here