பிகினிங்: ஜெகன் விஜயா என்ற புதுமுகம் இயக்கியுள்ள படம் பிகினிங். இதில் வினோத் கிஷன், கெளரி கிஷன், சச்சின், ரோகிணி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ‘ஸ்பிலிட் ஸ்கிரீன்’ வகையில் உருவாகி உள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜெகன் விஜயா கூறியதாவது.
ஒரே திரையில் இரண்டு கதைகளை சொல்வதுதான் ஸ்பிலிட் ஸகிரீன் வகை படங்கள், உலகம் முழுக்க அரிதாக இத்தகைய படங்கள் வந்துள்ளது. ஆசியாவிலேயே இதுதான் முதல் படம். ஒரு பேமிலி டிராமா, ஒரு த்ரில்லர் கதை இரண்டும் ஒரே நேரத்தில் ஒரே திரையில் ஓடும். ஒரு கதையின் காட்சியோ, வசனமோ இன்னொரு படத்திற்கு இடையூறாக இருக்காது. ஆனாலும் இரண்டு கதைக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும், கடைசியில் இரு கதையும் ஒரு புள்ளியில் இணையும். இதை ஒரு புதிய முயற்சி என்பதற்காக செய்யவில்லை. இந்த கதைக்கு இப்படியான ஒரு முறை தேவைப்பட்டது. ஒரு முழுமையான திரை அனுபவத்தை தரும் படமாக இப்படம் இருக்கும் என்றார்.