அட்சய திருதியை நன்நாளில் தொடங்கும் அனைத்து விதமான செயல்களும் பெருகி சுபிக்ஷ்ம் ஏற்படும் என்பது ஐதீகம். இந்த வருடம் 2023 அட்சய திருதியை நாளானாது ஏப்ரல் 22ம் தேதி காலை தொடங்கி மறுநாளான 23ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை என இரு நாட்கள் உள்ளது.
இந்த அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி வாங்கும் நிலை ஏற்பட்டு சேமிப்பும் தங்க நகைகளும் அதிகரிக்கும் என நம்பப்பட்டு வருகிறது. தங்கம் வாங்கும் வசதி உள்ளவர்களும் இந்நாட்களின் அருகில் வீட்டில் சுபவிஷேங்கள் நிகழ்ச்சிகள் நடத்த இருப்பவர்களும் இந்த அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி மற்றும் இதர பொருட்களையும் வாங்கலாம்.
அட்சய திருதியை நாளானது பொருட்களை வாங்கும் நாட்களாக மட்டும் இன்றி இலாதவர்களுக்கு உதவுவதற்கும் சிறந்த நாளாக விளங்குகிறது. பள்ளி குழந்தைகளுக்கு நேட்டு, புத்தகம், பேனா,பென்சில், தண்ணீர் பாட்டில், பை அனைத்தையும் தானமாக வழங்கலாம்.

அறிந்து கொள்க: அட்சய திரிதியை: அப்படி என்ன சிறப்பு
வயது மூப்படைந்து நலிவுற்றவர்களுக்கும் தங்களால் இயன்ற ஓரு வேலை உணவு வழங்கலாம். வறுமையுற்று இருக்கும் மனிதர்களுக்கு துணிகள், உணவு பண்டங்கள் என அனைத்தையும் வழங்கி அட்சய திருதியை நன்நாளின் பலனை அடையலாம். அதுபோல விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்க முடியாதவர்கள் சமையலுக்கு தேவையான உப்பு, மிளகு, மஞ்சள், அரிசி என அனைத்தையும் நாளில் வாங்கலாம். மேலும், வீட்டிற்கு தெய்வத்திற்கு தேவையான குங்குமம், கற்பூரம், எண்ணெய் போன்ற பொருட்களையும் வாங்கி இறைவனை வழிபடலாம்.
அட்சய திருதியை நாளில் மிக முக்கியமாக ஓரு பத்து அல்லது ஐந்து நபர்களுக்கு தயிர் சாதம் செய்து அதனை தானமாக வழங்கி மகாலட்சுமியின் அருளை பெறலாம்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.