ஓரு லிட்டர் பெட்ரோல் 70 க்கும் டீசல் 60 க்கும் கொடுக்கலாம்

0
17

ஓரு லிட்டர் பெட்ரோல் 70 ரூபாய்க்கும் டீசல் ஓரு லிட்டர் 60 ரூபாய்க்கும் கொடுக்க முடியும் என தெலுங்கானா அமைச்சர் ஓருவர் கூறியுள்ளார். நாளுக்கு நாள் பெட்ரோலும் டீசலும் மாறி மாறி விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் ரஷ்யா உக்ரைன் போர் என்றும் கச்சா எண்ணெயின் விலை ஏற்றமும் தான் காரணம் என அரசியல் தலைவர்களும் அரசாங்கமும் கூறி வருகின்றன.

ரஷ்யா உக்ரைன் போருக்கு முன்னரே மத்திய அரசும் மாநில அரசும் பெட்ரோல் மீதும் டீசல் மீதும் வரியை கூட்டி கொண்டே தான் சென்றது. இப்போது போரினை காரணம் காட்டி கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்தினை காரணம் காட்டி இரு அரசும் எண்ணெய் விலையை ஏற்றி உள்ளது குறிப்பிட தக்கது.

ஓரு லிட்டர் பெட்ரோல் 70 க்கும் டீசல் 60 க்கும் கொடுக்கலாம்
கே டி ராம ராவ்: ஓரு லிட்டர் பெட்ரோல் 70 க்கும் டீசல் 60 க்கும் கொடுக்கலாம்

இதற்கிடையில், தெலுங்கானா அமைச்சர்களில் ஓருவரான கே.டி.ராமா ராவ் என்பவர் கூறிகையில், ”இந்திய அரசின் செயல்பாட்டால் பெட்ரோல் டீசல் விலை உயர்வதற்கு மாநில அரசுகளே காரணம் என கூறுவதுதான் நீங்கள் கூறும் கூட்டாச்சி தத்துவமா நரந்திர மோதி ஜி? செஸ் வரியை மத்திய அரசு நீக்கி விட்டால், நாடு முழுவதும் எங்களால் பெட்ரோல் 70 ரூபாய்க்கும் டீசல் 60 ரூபாய்க்கும் கொடுக்க முடியும். ஓரே நாடு ஓரே விலை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு முன்னரே ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை பேச வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய போதே எதிர்த்தவர். ”என்ன மொழி பேச வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்” எனக் கூறியிருந்தார் இப்போது இக்கேள்வியையும் எழுப்பியுள்ளார் தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here