இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இனி விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு போர் அடிக்காது உற்சாகமாக பொழுது போக்கலாம்.
இந்தியாவில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஓன்று அதில் தினமும் எண்ணற்ற உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு ஏற்படும் அசோகரியத்திற்காகவும் காத்திருக்கும் பயணிகளின் நேரத்தை இனிமை ஆக்கவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி விமான பயணங்களில் ஏற்படும் காலதாமதம், விமான பயணிகளை வரவேற்க காத்திருக்கும் பயணிகளின் நேரத்தை இன்பாமாகவும் போர் அடிக்காமலும் பார்த்துக் கொள்ள PVR திரையரங்கம் நிறுவப்பட்டுள்ளது. இதில் 5 திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து இந்த திரையரங்கு காட்சிகளை பார்த்து மகிழலாம். இந்த திட்டம் முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் நேற்று திறக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இதில் புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
மேலும், கட்டிமுடிக்கப்படுள்ள உணவு விடுதிகள், சில்லறை கடைகள் உள்ளிட்டவை கூடிய விரைவில் திறக்கப்பட உள்ளன. இதனால் விமானநிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுது போக்கிற்காக திரையரங்கம், சில்லறை கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் அமைக்க ரூ 250 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கார்பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு கடந்த டிசம்பரில் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் நேற்று திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: INDVSNZ T20: பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சுப்மன் கில்
சென்னை விமான நிலையத்திலிருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட இணைப்புப் பாலம் வழியாக திரையரங்கை அடையலாம். இந்தியாவிலேயே முதன்முறை என்பதால் இதனை விமான பயணிகள் வெகுவாக வரவேற்று வருகின்றனர்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.