சர்வதேச 22 வது உலக கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஏராளமான வெளிநாட்டு பயணிகள் அங்கு வந்து தங்கி தங்கள் நாடு விளையாடி வரும் போட்டிகளை கண்டுகளித்து வருகின்றன. இந்நிலையில், ஓய்வு நேரங்களில் அங்கு உள்ள பாலைவனத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து பாலைவன அழகையும் ஓட்டக சவாரி செய்வதையும் படம்பிடித்து ரசித்து வருகின்றனர்.
உலக கால்பந்து போட்டி முதன் முறையாக குளிர் காலத்தில் நடைபெற்று வருகிறது. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் கால்பந்தை ரசிப்பதற்கு ஈடாக சர்வதேச பயணிகள் கத்தாரை சுற்றிப்பார்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கத்தார் தலைநகர் தோஹா நகருக்கு அருகில் உள்ள பாலைவனத்தை சுற்றிப்பார்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பிபா உலக கால்பந்து போட்டிகள் நவம்பர் 20ந் தேதி தொடங்கி டிசம்பர் 18ந் தேதி இறுதி போட்டியுடன் நிறைவு பெற உள்ள இந்நிலையில், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாலைவனத்தில் ஓட்டக சவாரி செய்யும் பயணத்தை வெகுவாக ரசித்து வருகின்றனர். இதனால் ஓட்டகங்கள் ஓரு நாளைக்கு 20 முதல் 300 முறை ஓட்டகம் சவாரி நிகழ்கிறது.
அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளதால் ஓட்டகங்களின் எண்ணிக்கையும் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பதிலும் அவர்களின் தேவைகை பூர்த்தி செய்வதையும் கத்தார் அரசாகங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக காலை சூரிய உதய நேரத்திலும் மாலை அந்தி சாயும் நேரத்திலும் பாலைவனப்பயணம் செய்வதை சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் அந்த நேரங்களில் பாலைவனப்பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை தாங்கள் கண்டிராத புதுவித அனுபவமாக பாலைவனப் பயணம் இருப்பதால் ஒட்டக சவாரிக்குள் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தோஹாவே விழாக் கோலம் பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: உலக கால்பந்து போட்டியால் தமிழகத்திற்கு வருவாயா எப்படி?
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.