கேரளா: சொந்த வீட்டை விற்கும் நேரத்தில் கோடீஸ்வரரான பெயிண்டர் லாட்டரி மூலம் அடித்த ஜாக்பாட்.
கேரளாவில் முகமது என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். தனது மகள்களின் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார். இறுதியில் தான் வசித்து வந்த சொந்த வீட்டை45 லட்சத்திற்கு விற்க முடிவு செய்தார். இதற்காக 24 ம் தேதி மாலை 5 மணிக்கு முன்பணம் வாங்க இருந்த நிலையில், 3 மணிக்கு அவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு 1 கோடி பணம் கிடைத்திருப்பதாக தகவல் வந்தது.
இதனை அடுத்து அவர் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். சொந்த வீட்டை விற்க இருந்த நிலையில் கோடிஸ்வரராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது இப்படி ஓரு நிகழ்ச்சி கடவுள் கொடுத்த பரிசாக முகமது கருதினார்.

தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்து உள்ளது. மீறி விற்கப்பட்டால் சிறை தண்டனையும் நீதிமன்றத்திற்கு அபாரதமும் விதிக்கப்படுகிறது. ஆனால், கேரளா மாநிலத்தில் லாட்டரி சீட்டு விற்பனையை அரசே நடத்துகிறது. அரசுக்கு மிக முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை மூலம் அம்மாநிலத்திற்கு கிடைக்கிறது.
கேரளாவில் அரசின் முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை உள்ளது. வாரத்தின் 7 நாட்களும் லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களில் சிறப்பு லாட்டரி சீட்டுகள், அதிக பரிசு தொகையுடன் அறிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இதன் மூலம் பல ஏழை எளியவர்களும் திடீர் லட்சாதிபதியாகவும் கோடீஸ்வரர்களாகவும் உருவாகின்றனர். கூலி தொழிலாளியான பெயிண்டர் இப்போது கோடீஸ்வரராக மாறி உள்ளார்.