இந்தியாவை ஜிம்பாப்வே அணி தோற்கடித்தால் பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி ஜிம்பாப்வே நபரை திருமணம் செய்து கொள்வதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வைரல்.
பாகிஸ்தானில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சேஹர் ஷின்வாரி சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியினரை வம்பிழுத்து வருகிறார். இதற்கு முன் நடந்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணியினருடன் நடந்த போட்டியில் இந்தியா போராடி தோற்றது. இது குறித்து டிவிட்டரில் பாண்டியா தங்களுக்கு ஆதரவு தாருங்கள் இப்போட்டி மூலம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம் என டிவிட்ட செய்திருந்தார்.
அதற்கு, பாகிஸ்தான் நடிகை ஷின்வாரி அடுத்து நடக்கவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடமும் விளையாண்டு தோற்று பாருங்கள் நிறைய இன்னும் நிறைய கற்றுக் கொள்வீர்கள் என்று பதில் அளித்திருந்தார். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்து அவருக்கு பலவிதங்களில் பதில் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா அதிரடியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தகக்து. சமீபத்தில் நடிகை ஷேகர் ஷின்வாரி, நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷமிடம் ‘நீங்கள் என்னுடைய வருங்கால குழந்தைகளுக்கு தந்தையாக இருக்க முடியுமா’ என்று வித்தியாசமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். இதோடு இரண்டு எமோஜிக்களை விளையாட்டாக பதிவிட்டிருந்தார்.
தற்போது, இந்தியா ஜிம்பாப்வே உடனான போட்டிகள் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் நடிகை ஷின்வாரி திருமபவும் இந்தியாவிற்கு எதிராக டிவிட் செய்து ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளார்.
இந்தியா ஜிம்பாப்வே போட்டிகளில் ஜிம்பாப்வே அணி ஜெயித்தால் நான் ஜிம்பாப்வே நபர் ஓருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி டிவிட்ட செய்து வைரலாக்கியுள்ளளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
I'll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match 🙂
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.