வெகு விமர்சையாக நடைபெற்ற பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் குடிக் கொண்டிருக்கும் முருகப் பெருமானின் குடமுழுக்கு விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கின்றனர். அறுபடை வீடுகளில் 3வது இடமான பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் 16 ஆண்டுக்கு பின் குடமுழுக்கு விழா நடந்து முடிந்துள்ளதை முன்னிட்டு பழனி முழுவதிலும் மக்கள் வெள்ளம் அதிகரித்து காணப்படுகிறது.
முருகப் பெருமானை காண கோடிக் கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தைப்பூசமும் நடைபெற உள்ளதால் எப்போதும் கூட்டமாக காணப்படும் இவ்வாலயம் குடமுழுக்கு மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளாமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்ய காத்திருக்கின்ற நிலையே ஏற்பட்டுள்ளது.

பக்தர்களின் உதவிக்காகவும் பாதுக்காப்புக்காகவம் ஏராளமான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் அதிக அளவில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இதற்கான பூர்வாங்க பூஜைகள் ஜனவரி 16 ம் தேதி துவங்கி நடைபெற்றன. ஏராளமான சிவாச்சாரியார்கள் மந்திர, வேதங்கள் முழங்க ஜனவரி 23 ம் தேதி முதல் யாக சாலை பூஜைகளும் துவங்கி நடத்தப்பட்டு வந்தன. சரவண நதியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து இடும்பன் கடம்பன் மற்றும் அனைத்து சிறிய சன்னதிகளுக்கு கடமுழுக்கு நேற்று வரை நடத்தப்பட்டது. இன்று 26ந் தேதி காலை 8.30 மணியளவில் வேதமந்திரங்கள் முழுங்க ஆச்சாரியார்கள் குடத்தை தலையில் ஏந்தி கலத்திற்கு நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர்.
இதையும் படியுங்கள்: 2023 தைப்பூச திருநாள் மற்றும் அதன் மகிமையும் முழு விவரம்
இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். இது தவிர நேரடி காட்சிகள் பல தொலைக்காட்சிகளில் ஓளிப்பரப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலைக்கோவிலுக்கு வந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த முதல் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் மற்ற பக்தர்களும் கும்பாபிஷேக வைபவங்களை தரிசனம் செய்வதற்காக மலை அடிவாரம் துவங்கி, பழனி பஸ் ஸ்டாண்ட் வரை 18 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.