”பந்திக்கு முந்து படைக்கு பிந்து” என்ற பழமொழி இன்று பலவாறாக தவறான பயன்பாட்டில் திரித்து வழங்கப்படுவது கவலை அளிக்கிறது. பழமொழி என்றால் பழமையான மொழி என்று பொருள்.
பழமொழிகள் ஓரு சமுதாயத்தின் பழமையான சிந்தனைகளையும், நீண்ட காலமாக இருக்கும் அறிவு குறிப்புகளையும், அறிவுக் கூர்மையையும் சார்ந்ததாகும். அப்படி நம் முன்னோர்கள் விட்டு சென்ற பொன் மொழிகளின் உண்மையை கொண்டு வருவதே தலையாய கடைமையாக கருதி விளக்குகிறேன்.
தற்போதைய தவறான விளக்கங்கள்
- பந்திக்கு முந்து-என்றால் உணவு உண்பதற்கு முதல் ஆளாக சென்று உணவினை சாப்பிட வேண்டும் பின்னர் சென்றால் சுவையான உணவில் ஓரு சில பதார்த்தங்கள் நமக்கு கிடைக்காமல் போய்விடும் என்றும் முதல் பந்தியில் உட்கார்ந்து உணவு சாப்பிட்டால் அனைத்து பதார்த்தங்களும் கிடைக்கும் எனவும் தவறான புரிதலுடன் இன்று வழக்கத்தில் உள்ளது.
- படைக்கு பிந்து- என்றால் போர் போன்ற நிகழ்வுகளின் போது படைக்கு பின் சென்றால் தான் நாம் உயிருடன் இருக்க முடியும். மேலும் போரின் போது அனைத்து படைகளும் சென்ற பின் இறுதியாக செல்ல வேண்டும் என்றும் போரின் போது படையிலிருந்து விலகிட வேண்டும் என்றும் பழமொழி தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
பந்திக்கு முந்து படைக்கு பிந்து – பழமொழிக்கான உண்மை அர்த்தங்கள்
- ‘பந்தி‘ என்ற சொல்லானது இலக்கியத்தில் ”சமாதானம்” அல்லது ”சமரசம்” என தரப்பட்டுள்ளது. பொதுவாக விருந்து போன்ற விழாக்களில் அனைவரையும் சமமாக அமர வைத்து எந்த சாதி, மதம், உயர்நதவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பாராமல் ”சமபந்தி” நடத்துவதையே அக்காலத்தில் பந்தி என்று வழங்கி உள்ளனர்.
- இன்னொரு விளக்குமும் பந்தி என்றால் ‘விருந்து‘ அதாவது விருந்தினர்களுக்கு சரியாக உணவினை பரிமாறுவதற்கு முந்தி கொண்டு வர வேண்டும். பின் தான் உணவினை சமைத்தவர் பந்தியில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதே உண்மையான அர்த்தம்
- பந்தியின் போது வலது கையானது முந்திக் கொண்டு (முன்னோக்கி) வர வேண்டும்.
- அதுபோல படையின் போது வலது கையானது வில்லிலிருந்து ஏற்றப்படும் நாணனினை செலுத்த வலது கையானது (பின்னோக்கிக்) அம்பை செலுத்தி சரியான குறிகோலை விரைவாக அடைந்து எதிரிப் படைகளை வீழ்த்த வேண்டும். இதுவே படைக்கு பிந்து என்பது, நம் முன்னோர்களின் விளக்கமாக இருந்திருக்கும்.
அக்காலத்தில் காலட்படை என்ற ஓரு படை இருந்தது. அப்படைக்கு ‘பந்தி படை‘ என்ற பெயரும் உணடு. போர் நடக்கும் காலத்தில் பந்திபடையை முன்னே அனுப்பி விடுவர். அச்சம் தரும் ஆயுதங்களை கொண்ட படைகளை அதற்கு பின்னே அனுப்பி வைப்பர். அப்படி போரினை முறையாகவும் ஓழுக்கமாகவும் நடத்தினர் என கருத்துகள் நிலவி வந்துள்ளது.
நம் முன்னோர்கள் கருத்தாழம் மிக்கதாகவும் மக்கள் வாழ்வில் ஓன்றியதாகவும் பழமொழிகளை பார்ப்பார்கள். இலக்கியத்தோடும் வாழ்வியலோடும் பின்னப்பட்டவர்கள் நம் முன்னோர்கள் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.