இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் ரீலிஸ் தேதியை வெளியிட்டார் நடிகர் தனுஷ்

0
6

இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் ரீலிஸ் தேதியை வெளியிட்டார் நடிகர் தனுஷ்.

வித்தியாசமான கதைகளையும் புதிய புதிய முறைகளில் திரைப்படத்தை இயற்றுபவர் ஆர் பார்ததிபன் இவர் சிறந்த நடிகர் மற்றும் வசனத்திலும் சிறப்பானவர். திரைக்கலையை எப்படி மெறுகேற்ற முடியுமோ அதை அப்படியே செய்பவர். இவர் இயற்றி நடித்த ஓத்த செருப்பு படம் நன்றாக பேசப்பட்ட படம் தான் ஓருவராகவே இயற்றியும் நடித்த படம் தான் ஓத்த செருப்பு சைஸ் 9 என்ற படம்.

இப்படி படத்திற்கு படம் வேறுபாடுகளை கொடுப்பதில் வல்லவர் பார்த்திபன் பன்முக திறமைசாலி. தற்போது, இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி அதில் நடிகராகவும் நடித்துள்ளார். இப்படத்தில் வரலட்சு சரத்குமார், பிரிகிதா, ரோபோ ஷங்கர் என பலர் நடித்துள்ளனர். மேலும், வலுசேர்க்கும் விதமாக இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் ரீலிஸ் தேதியை வெளியிட்டார் நடிகர் தனுஷ்

கலையின் மீது என்றும் தீராத தாகத்தோடு தொடர்ந்து புதுப்புது வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குனர் பார்த்திபனின் அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதுவும் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் தான் தனது டிவிட்டரில் இருந்து வெளியிட்டார். அவர் செய்த இந்த உதவியால் மகிழ்ந்து போன பார்த்திபன், நன்றி தம்பி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here