பாஸ்தா (மக்ரோனி) செய்முறை

0
7

பாஸ்தா (மக்ரோனி) செய்முறை: தினமும் இட்லி, தோசை,உப்புமா போன்ற உணவுகளையே உண்ணும் வீட்டில் உள்ளவர்களுக்கு மக்ரோனி போன்றவைகளை செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். ஓரே வகையான உணவினை உண்ணும் போது ஓருவித சலிப்பு ஏற்படும் அப்போது இது போன்ற உணவு வகைகளை செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இந்த பாஸ்தாவை செய்வதும் எளிமை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சிறப்பான முறையில் டேஸ்டாக செய்ய முடியும். இந்த பதிவில் மக்ரோனி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

மக்ரோனி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

 1. மக்ரோனி
 2. காய்ந்த மிளகாய்
 3. பூண்டு
 4. கடுகுகலப்பு
 5. கல்லப்பருப்பு
 6. எண்ணெய்
 7. வெங்காயம்
 8. தக்காளி
 9. மஞ்சள்தூள்
 10. கருவேப்பிளை
 11. கொத்தமல்லி
 12. பீன்ஸ்
 13. கேரட
 14. குடைமிளகாய்
பாஸ்தா (மக்ரோனி) செய்முறை

செய்முறை:

 • முதலில் பாஸ்தாவை தேவையான அளவில் எடுத்து கொள்ளவும். ஓரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதை நன்றாக வேகவிடவும். அதில் பாஸ்தாவை போட்டு உப்பையும் சிறிதளவு சேத்து போடவும். பின்னர், சிறிது நேரம் கழித்து பாஸ்தா வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
 • பாஸ்தாவில் உள்ள தண்ணீரை நீக்கி விடவும். அதனை ஓரு பாத்திரத்தில் வைத்து விடவும்.
 • எண்ணெய் சட்டி அல்லது வானலை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைக்கவும். அதில் நீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணெயை சிறிதளவு ஊற்றி நன்றாக வெந்தவுடன் கடுகுகலப்பை சேர்க்கவும்.
 • கடுகுகலப்பு வெடித்தவுடன் அதில் மிளகாய், பூண்டு, கருவேப்பிலை, கல்லப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
 • வதக்கியவுடன் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் நன்றாக வருபட உப்பினை சேர்க்கவும் உடன் மஞசள் தூள் சேர்க்கவும். பின்னர், பீன்ஸ், கேரட், குடை மிளகாய் போன்ற காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
 • நன்றாக வதங்கியவுடன் பேஸ்ட் போன்று காணப்படும் போது தேவையான உப்பை சேர்த்து கலந்து விட்டு பின்னர் பாஸ்தாவை அதில் போட்டு உடைபடாதவாறு நன்றாக கலந்து விடவும்.
 • கொத்தமல்லி இலைகளை அனைத்து பகுதிகளிலும் தூவிட்டு அடுப்பை அணைத்து விட்டு சுடச்சுட அனைவருக்கும் பரிமாற சுவை நாக்கினி் தாண்டவம்.
 • வேறு எந்த மசாலாவை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. காரத்திற்கு தகுந்தார் போல மிளகாயை சேரத்து சமைத்தால் போதும்.

இதையும் படியுங்கள்: இலந்தை வடை செய்முறை

இப்படி எளிமையான முறையில் சுவையான காலை அல்லது இரவு நேரத்தில் செய்து வீட்டில் உள்ளவர்களை மகிழ்விக்கலாம். காய்கறிகள் போட விரும்புவர்கள் போடலாம் போட விரும்பாதவர்கள் தவிர்கலாம். தக்காளி, கேரட், பீன்ஸ், குடை மிளகாய் போட்டு செய்யும் போது அதன் தனிச்சுவை வாயினில் நின்று பேசும்.

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here