உலக அளவில் பாலிவுட்டின் பதான் திரைப்படம் இதுவரை 832 கோடியை வசூலித்து சாதனை நிகழ்த்தி வந்துள்ளது. மேலும், விரைவில் ஆயிரம் கோடியை நெருங்கும் என கூறப்படுகிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் திரைப்படம் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது. கொரோனா மற்றும் சிறந்த கதை அம்சம் என ஓய்வு எடுக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள பதான் திரைப்படம் உலக அளவில் 832 கோடியை கடந்து விட்டதாக கூறப்படுகிறது.
பதான் திரைப்படம் தேசப்பற்று கொண்ட கதை அம்சம் கொண்ட படமாகவும் அதிரடி காட்சிகளும் இடம் பெற்று ரசிகர்களுக்கு சிறந்த படமாக இருப்பதால் வெளியாகிய இரண்டு வாரத்திலேயே 800 கோடியை தாண்டி சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹான் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். சர்வதேச அளவில் 2500 திரையரங்குகளுக்கும் அதிகமாக திரையிடப்பட்டிருந்த நிலையில், படத்தின் வசூல் 800 கோடியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பாலிவுட் வட்டரங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மலையாளம் என அனைத்து ரசிகர்களிடமும் இந்த படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று இந்த திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.780 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ‘பதான்’ ரூ.481கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இன்று 832 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கானுக்கு இதனை தொடர்ந்து ஜாவான் திரைப்படமும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜாவான் திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார் என்பது நாம் அறிந்ததே. இவர் நடிகர் விஜயை வைத்து ஹார்ட்டிக் வெற்றியை கொடுத்தவர். ஜாவான் திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் அதிகாரப்பூர்வ தகவல்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.