பதினெண் கீழ்கணக்கு நூல்கள் பற்றி அறிவோம்: சங்க காலத்திற்கு அடுத்தப்படியாக இருண்ட காலம் என்று சொல்லக்கூடிய களப்பிரர்களின் காலம் தோன்றியது. அக்காலத்தில் மக்கள் சுதந்திரமாக செயல்படவில்லை. மாறாக பல தீய செயல்களுக்கு ஆளாகினர் புலவர்கள் மதிக்கப்படவில்லை மக்களும் பல அவதிக்கு உள்ளாகினர். அப்போது தோன்றியதே இந்த அறநூல்கள்.
இந்த காலத்தை சங்கம் மருவிய காலம் என்பர். இக்காலத்தில் தான் பதினெண் கீழ்கண்க்கு நூல்கள் தோன்றியது. இதனை நீதிநூல்கள் அல்லது அற நூல்கள் அல்லது இருண்ட கால இலக்கியங்கள் எனவும் அழைப்பர். பதினெட்டு நூல்களை உடையதாதலின் இது பதினெண் நூல்கள் எனப்பட்டது. கீழ்கணக்கு என்றால் பாடல் அடிகள் குறைந்து காணப்படுவதை குறிக்கும்.
இந்த பதினெட்டு நூல்களையும் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவையாகும். இந்த பதினெண் நூல்களை அறம் சார்ந்த நூல்கள், அகம் சார்ந்த நூல்கள், புறம் சார்ந்த நூல்கள் என பிரிப்பர்.

பதினெண் கீழ்கணக்கு நூல்களை விவரிக்கும் வெண்பா:
நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.
என்ற பாடல் அடிகள் மூலம் அறியலாம். மேலும், அற நூல்களை 11, அக நூல்கள் 6, புற நூல் 1 எனப் பிரித்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்: பதினெண் மேற்கணக்கு நூல்கள்
பதினெண் கீழ்கணக்கு நூல்கள் பற்றிய அட்டைவணை:
வரிசை எண் | பதினெண் கீழ்கணக்கு நூல்களின் பெயர்கள் | பாடல் அடிகளின் எண்ணிக்கை | வகை | ஆசிரியரின் பெயர் |
---|---|---|---|---|
1. | நாலடியார் | 400 | அறம் | சமண முனிவர்கள் |
2 | நாண்மணிகடிகை | 101 | அறம் | விளம்பின் நாகனார் |
3 | இன்னா நாற்பது | 40+1 | அறம் | கபிலர் |
4 | இனியவை நாற்பது | 40+1 | அறம் | பூதச்சேந்தனார் |
5 | திருக்குறள் | 1330 | அறம் | திருவள்ளுவர் |
6 | திரிகடுகம் | 100 | அறம் | நல்லாதனார் |
7 | ஏலாதி | 80 | அறம் | கணிமேதாவியார் |
8 | பழமொழி நானூறு | 400 | அறம் | முன்றுரை அரையனார் |
9 | ஆசாரக் கோவை | 100+1 | அறம் | பெருவாயின் முள்ளியார் |
10 | சிறுபஞ்சமூலம் | 102 | அறம் | காரியாசான் |
11 | முதுமொழிக் காஞ்சி | 100 | அறம் | கூடலூர்க்கிழார் |
12 | ஐந்திணை ஐம்பது | 50 | அகம் | மாறன் பொறையனார் |
13 | ஐந்திணை எழுபது | 70 | அகம் | மூவாதியார் |
14 | திணைமொழி ஐம்பது | 50 | அகம் | கண்ணன் சேந்தனார் |
15 | திணைமாலை நூற்றயம்பது | 150 | அகம் | கணிமேதாவியார் |
16 | கைந்நிலை | 60 | அகம் | புல்லங்காடனார் |
17 | கார்நாற்பது | 40 | அகம் | கண்ணங் கூத்தனார் |
18 | களவழி நாற்பது | 40+1 | புறம் | பொய்கையார் |
இந்த அட்டவணை TNPSC மற்றும் போட்டி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற உதவும் என நம்புகிறேன்.
இது போன்ற தமிழ், கல்வி, ஜோதிடம், ஆன்மீகம், தொழில் நுட்பம், கடி ஜோக்ஸ், பழமொழி, அன்றாட செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.