தெலுங்கு படங்கள்: தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் மற்றும் பூமிகா நடிப்பி்ல் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் குஷி. இப்படம் தமிழில் விஜய், ஜோதிகா நடித்த குஷி படம்தான். தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலுமே இப்படம் எப்பவுமே எவர்கிரீ்ன் படம்தான். தெலுங்கில் இப்படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். தற்போது இப்படத்தை 4கே புரொஜக்ஷ்ன் தொழில்நுட்பத்தில் டிசம்பர் 31 மாலை தொடங்கி ஜனவரி 6 வரை தியேட்டரில் ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகரும் இப்படத்தின் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘எல்லா காலத்துக்குமான பிளாக்பஸ்டர் காதல் படம் இது. இந்த எவர்கிரீன் ரொமான்ஸை டிசம்பர் 31 முதல் திரையரங்குகளில் உங்களுக்கு தர காத்திருக்கிறோம். எல்லோரும் அந்த அனுபவத்தை பெறுங்கள். என்றும் நிலைத்திருக்கும் குஷி காதலை மீண்டும் ஒரு முறை கண்டு மகிழுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் புத்தம்புதிதாக புதிய வெர்ஷனில் வெளியாக உள்ளது.
அதேபோன்று கடந்த 2003ல் மகேஷ் பாபு, பூமிகா நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம்தான் தமிழில் விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளயாகி பட்டையை கிளப்பிய ‘கில்லி’ திரைப்படம். இப்போது ஒக்கடு படமும் 20 வருடங்கள் கழித்து ஜனவரி 7 அன்று ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதுபோன்று தமிழிலும் ‘பாபா’ படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கலாச்சாரம் தமிழிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.