பவன் கல்யாண்: ஆந்திர மாநிலத்தில் ஜனசேனா என்ற கட்சியின் தலைவராக பவன் கல்யாண் இருக்கிறார். தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் பவன் கல்யாண் அரசியலிலும் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் வரும் 2024ம் ஆண்டு ஆந்திராவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஆந்திரா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார். தனது கட்சியினர் பயணம் செய்வதற்காக ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் 8 புதிய கார்களை பவன் கல்யாண் வாங்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது தனக்காக ஒரு புது வாகனத்தை ஆர்டர் செய்து அவர் வரவழைத்துள்ளார். இது மிலிட்டரி வேன் போன்ற வடிவில் உள்ளது. அதே போன்ற நிறமும் கொண்டுள்ளது. அதே சமயம் இந்த வேனுக்குள் ஏசி, குளியல் அறை, படுக்கை அறை, மினி கிச்சன், மீடிங் ரூம் என சகல வசதிகளும் உள்ளது. இந்த வேனின மதிப்பு ரூ. 65 லட்சம் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தசராவுக்கு பிறகு மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள பவன் கல்யாண் திட்டமிட்டிருந்தார். திடீரென அந்த பயணம் ரத்தானது. இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார்.