கால்பந்து உலகின் பிதாமகன் என்று கூறப்படும் பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம் அந்நாட்டிற்காக முதல் உலக கோப்பையை தனது முழு திறமையால் தன்னம்பிக்கையால் பெற்று தந்த கால்பந்து உலகின் கடவுள் பீலே (82) காலாமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பீலேவுக்கு வெகு நாட்களாக சிகிச்சை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. பின்னர், தொடர்ந்து ஹூமோதெரபி மருத்துவம் செய்து கொண்டு வந்தார்.
அண்மையில், பீலேவை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக, அவரது மகள் கெல்லி நஸிமென்டோ தெரிவித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பீலே உயிரிழந்தார்.

இச்செய்தி கால்பந்து ரசிகர்களிடேயே பெரும் வருத்தத்தை அளித்து. சிறு வயதில் வறுமைக் காரணமாக ஷூ பாலிஷ் செய்து கொண்டும் வீட்டு வேலைகளை செய்து கொண்டும் டீக் கடையில் வேலை செய்து கொண்டும் இருந்தவர். பின்னர், பிரேசிலின் வெற்றி நாயகனாக கால்பந்து உலகின் முடிமன்னனாக அறியப்பட்டார்.
1950 ஆம் ஆண்டு பிரேசில் அணிக்கும் உருகுவே அணிக்கும் நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் உருகுவே அணி வென்று கோப்பையை பெற்றது. அப்போது, ரோடியோ கமென்ட்ரியை கேட்டுக் கொண்டிருந்த தன் தந்தை அழுதார். அப்போது, 9 வயது சிறுவனாக இருந்த பீலே கவலைப்படாதீர்கள் அப்பா நான் பெரியவனானதும் பிரேசிலுக்கு உலக கோப்பையை பெற்று தருகிறேன் என்றார்.
1958 ஆம் ஆண்டு நடைபெற்ற 6வது உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரேசிலுக்கும் அணிக்காக களமிறங்கிய பீலே(17) ஸ்வீடனுக்கு எதிராக கோல்களை அடித்து பிரேசிலுக்கு முதல் உலக கோப்பையை பெற்று தந்தார். தனது தந்தை்ககு செய்த சத்தியத்தை நீரூபித்து அசத்தினார். தொடர்ந்து பிரேசில் அணிக்காக பல்வேறு கோல்களை அடித்து பிரேசிலின் முன்னணி நட்சத்திரமாக உருவாகினார்.
இதையும் படியுங்கள்: இந்திய பாரத பிரதமர் மோடியின் தாயார் காலமானார்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.