பொன்னியின் செல்வன் நாவலை எழுத்தாளர் கல்கி எழுதியது. இந்த நாவலை படமாக்க நினைத்த மணிரத்னம் அதை திரைக்கு இந்தாண்டு கொண்டு வந்தார் அதில் வெற்றியும் கண்டார். இந்நிலையில், புதிய அறிவிப்பை இன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
இந்த பொன்னியின் செல்வன் நாவலை பலரும் படமாக எடுக்க முயன்ற போது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. பல ஆண்டு கனவை நினைவில் கொண்டு வந்தவர் இயக்குனர் மணிரத்னம். இப்படத்திற்கு பெரும் ஆதரவையும் பொருளுதவியும் செய்து தயாரிப்பு பணிகளை மேற்கொண்டது லைகா நிறுவனம். இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் மளிர்ந்தது.
இந்த மிகப் பெரும் நாலுக்கு உலக தமிழ் மக்கள் மட்டும் அல்லாது அனைத்து மொழிகளையும் கடந்து 500 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை புரிந்து இந்தாண்டு தமிழ் சினிமாவில் வரலாற்று சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் வாயிலாக பிரம்மிப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யாராய், என பல முன்னணி நடிகர்களும் நடித்து அசத்தி இருந்தனர்.
இவர்களுக்கு வலுசேர்க்கும் விதமாக தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். அனைத்து பாடல்களும் மிகப் பெரும் வெற்றியை பதிவு செய்தது. ஓடிடியிலும் ஓளிப்பரப்பு செய்யப்பட்டது.
இந்த படத்தை இரண்டு பாகங்களாக திரைக்கு கொண்டு இயக்கி உள்ளதாக அப்போதே இயக்குனர் மணிரத்னம் கூறியிருந்தார். இரண்டாம் பாகம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மாலை 4.00 மணிக்கு புதிய அறிவிப்பு ஓன்று அறிவிக்கப்பட உள்ளது என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
இதையும் படியுங்கள்: விஜய் லோகேஷ் கனகராஜூடன் இணையும் பிரபல இயக்குனர்
என்ன அறிவிப்பாக இருக்கும் என்று பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.