தாமஸ்: உலகிலேயே மிக நீளமான மூக்குடைய மனிதரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த நவம்பர் 12ம் தேதி ‘historic vids’ என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள புகைப்படம்தான் அது. இது குறித்த ட்வீட்டில், ‘தாமஸ் வாட்ஹவுஸ் என்பவர் ஒரு ஆங்கில சர்க்கஸ் கலைஞர். இவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். உலகிலேயே மிக நீளமான மூக்குடைய நபர் என மிகவும் பிரபலமானவர். இவருடைய மூக்கு 7.5 இன்ச் அதாவது 19 செமீ நீளமுடையது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனைகள் இணையதளத்தில் இவரை பற்றிய ஒரு பக்கம் உள்ளது. அதில் அவர் ‘பயண ஃப்ரீக் சர்க்கஸின் உறுப்பினர்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ட்வீட்டை 1.20 லட்சம் பயனர்கள் லைக் செய்துள்ளனர். 7,200க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். இதுபற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தாமஸ் 1770ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் வாழ்ந்தவர். இவர் பல்வேறு சர்க்கஸ் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மிக நீளமான மூக்குடைய நபரின் பெயர் மேஹ்மெட் ஓசெளரெக். இவர் துருக்கியை சேர்ந்தவர். இவரது மூக்கின் நீளம் 3.46 இன்ச். இந்த நபரின் பெயர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.