ஸ்னீக்பீக்குக் காட்சியாக பிச்சைக்காரன் 2 டிரைலர் இன்று மாலை வெளியீடு

0
14

ஸ்னீக்பீக்குக் காட்சியாக பிச்சைக்காரன் 2 டிரைலர் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குனரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

பிச்சைக்காரன் திரைப்படத்தை இயக்குனர் சசி 2016 ஆம் ஆண்டு வெளியிட்டு அனைவராலும் பாரட்டப்பட்ட படமாகவும் அனைவரும் விரும்பும் படமாக அமைந்து விஜய் ஆண்டனிக்கு திருப்புமுனைப் படமாகவும் அமைந்தது. முதலில் இசையமைப்பாளராக மட்டுமே களமிறங்கி பலரது நாவிலும் இவரது இசை பாடல்களை கட்டவிழ்த்த விட்ட விஜய்ஆண்டனி நடிகராகவும் அவதாரம் எடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.

பிச்சைக்காரன் திரைப்படம் மிகப் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார். இந்த படத்தில் நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார். இதனால் இப்படம் மூலம் இயக்குனராகவும் விஜய் ஆண்டனி திறம்பட தனது பணியை செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து மலேசியாவில் நடைபெற்று வந்த நிலையில் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்னீக்பீக்குக் காட்சியாக பிச்சைக்காரன் 2 டிரைலர் இன்று மாலை வெளியீடு

இந்நிலையில், படப்பிடிப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும் தனக்கு உடல் நிலை தேரி வருவதாகவும் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியீடுவதாக டிவிட்டர் சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், மற்றப் படங்களின் டிரைலர் போல இல்லாமல் படத்தின் முதல் 4 நிமிட காட்சிகள் ஸ்னீக்பீக்காக நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என நேற்று குறிப்பிட்டுள்ள விஜய் ஆண்டனி, “பணம் உலகை காலி பண்ணிடும்” என்றும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: குமரி: திருவள்ளுவர் சிலையை காண கண்ணாடி பாலம் அமைக்க திட்டம்

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here