ஐநா அமைதிப்படை: ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இந்திய ராணுவத்தின் பெண் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இது குறித்து பிரதமர் மோடி பெருமையுடன் ட்வீட் செய்துள்ளார். சூடானின் அபெய் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் முழுவதும் பெண் வீராங்னைகளை கொண்ட இந்திய அமைதிப் படையினர் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இந்திய ராணுவம் அதன் மிகப்பெரிய பெண் வீரர்கள் அடங்கிய அமைதி காக்கும் படையினரை அபெயில் பணியில் ஈடுபடுத்துகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தது.
இதற்கு பதிலளி்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘ஐநாவின் அமைதி காக்கும் படையில் இந்தியா பங்களிப்பை வழங்குவது பாரம்பரியமாக உள்ளது. எங்களின் பெண் சக்தி இதில் பங்கேற்பது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.