சிறுத்தைகளை மத்திய பிரதேச உயிரியல் பூங்காவிற்கு வழங்குகிறார் பிரதமர்

0
8

சிறுத்தைகளை மத்திய பிரதேச உயிரியல் பூங்காவிற்கு வழங்குகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு உள்ளனர். அரசு சார்பாகவும் பல நல்ல திட்டங்களை பிரதமர் மோடி அறிவிக்க உள்ளார்.

வரும் 17ல் துவங்கும் சேவை தினம், மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்., 2ல் முடிவுக்கு வருகிறது. ரத்த தானம், குடிநீர் சேமிப்புக்கான விழிப்புணர்வுடன் இந்த ஆண்டு மாவட்டம் தோறும், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ திருவிழாவுக்கு பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தைகளை மத்திய பிரதேச உயிரியல் பூங்காவிற்கு வழங்குகிறார் பிரதமர்

இந்த நாளில், நமீபியாவில் இருந்து வரவழைக்கப்படும் எட்டு சிறுத்தைகளை, பிரதமர் நரேந்திர மோடி தன் பிறந்த நாளான 17ம் தேதி, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார்.

இதையும் கவனியுங்கள்: டெல்லி ஓட்டலில் ‘மோடி’ சிறப்பு உணவுத் தட்டு அறிமுகம்

நம் நாட்டில் சிறுத்தைகள் இனமே இல்லை. கடைசியாக, சத்தீஸ்கரின் கோரியா பூங்காவில் இருந்த சிறுத்தை, 1948ல் இறந்தது. இதையடுத்து, 1952ல் இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் இந்தாண்டு ஜூலை 20ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நமீபியா அரசு எட்டு சிறுத்தைகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்குகிறது.

இந்த சிறுத்தைகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளன. இதற்காக, சிறப்பு விமானத்தில் ஐந்து பெண், மூன்று ஆண் சிறுத்தைகள், நமீபியாவில் இருந்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு, வரும் 17ம் தேதி காலையில் அந்த விமானம் வருகிறது.அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, இந்த சிறுத்தைகள் மத்திய பிரதேசத்துக்கு எடுத்து வரப்பட உள்ளன. தன் பிறந்த நாளான 17ம் தேதி, இந்த சிறுத்தைகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here