ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை?

0
22

இன்று காலை குஜராத்தில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலையை காணொலி மூலம் திறந்து வைத்தார் பாரத பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திலும் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துளளார்.

வட இந்திய மாநிலங்களில், ஹனுமத் ஜெயந்தி என்று அனுமன் ஜெயந்தி அழைக்கப்படுகிறது. இது சைத்ரா மாதத்தில் பௌர்ணமி நாளில் அனுசரிக்கப்படுகிறது. வானர கடவுள் என்று அழைக்கப்படும் அனுமன் இந்த நாளில் பிறந்தார் மற்றும் அனுமனின் பிறப்பை நினைவுகூரும் வகையில் அனுமத் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை பிரதமர் மோடி
ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை – பிரதமர் மோடி உரை.

பக்தர்கள் தங்கள் பிராந்திய நம்பிக்கைகள் மற்றும் பின்பற்றப்படும் நாட்காட்டியின் வகைக்கு ஏற்ப வருடத்தின் வெவ்வேறு நேரங்களில் ஹனுமத் ஜெயந்தியை அனுசரிக்கின்றனர். சைத்ரா பூர்ணிமாவின் போது நடைபெறும் ஹனுமத் ஜெயந்தி வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் அனுமன் ஜெயத்தி மார்கழி அமாவாசையின் போது அனுசரிக்கப்படுகிறது. பெரும்பாலும், மார்கழி அமாவாசை, மூலம் நட்சத்திரத்துடன் ஒத்துப்போகிறது. மூல நட்சத்திரம் நிலவிய மார்கழி அமாவாசையின் போது ஹனுமத் கடவுள் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அமாவாசையுடன் மூல நட்சத்திரம் ஒத்துப் போகாத ஆண்டுகளில், ஹனுமத் ஜெயந்தி நாளைத் தீர்மானிக்க அமாவாசை தினமே விரும்பப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியில் தமிழ் ஹனுமத் ஜெயந்தி ஜனவரி அல்லது டிசம்பரில் வருகிறது.

அனுமன் ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் காரணமாக குஜராத் கேசவானந்த் ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான 108 அடி உள்ள சிலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்தியாவின் நான்கு திசைகளிலும் அனுமன் சிலை திறக்க மத்திய அரசு திட்டமிட்டடுள்ளது. அதன்படி, முதல் சிலை வடக்கு பகுதியை குறிக்கும்  சிம்லாவில் 2010 ல் நிறுவியது.

இரண்டாவதாக குஜராத் கேசவானந்த் ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான 108 அடி உள்ள சிலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இது மேற்கு திசையை குறிக்கும் வகையில் அமைத்துள்ளனர். இதன் திட்டம் 2018 ல் 10 கோடி மத்தீப்பிட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

தெற்கு பகுதியான ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் முடிந்துள்ளது என்பது குறிப்பிட தக்கது. விரைவில் சிலை கட்டப்பட்டு சிலை திறப்பு விழா நடைபெறும் என குஜராத் சிலை திறப்பின் பின்னர்  பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here