இமாச்சல் பிரதேசம் பிளாஸ்பூரில் புதியதாக கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை நேற்று இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இவ்விழாவில் மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சல் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கலந்து கொண்டனர். கடந்த 2017ம் ஆண்டு இத்திட்டத்திற்கான் அடிக்கலை பிரதமர் மோடி நாட்டினார். இந்நிலையில், இந்தாணட்டு தசரா திருவிழாவின் நிறைவு நாளில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையை மக்களுக்கு திறந்து வைத்தார் பிரதமர்.
இந்த மருத்துவமனை ரூ.1470 கோடி மதிப்பீட்டில் உருவாகியுள்ளது. 18 சிறப்பு சிகிச்சை வார்டுகளும், 17சூப்பர் ஸ்பாஷலிட்டி பிரிவுகளும், 18 நவீன அறுவை சிகிச்சை மையங்களும் உள்ளன. இந்த மருத்துவமனையில் 750 படுக்கைகள், 64 ஐசியு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

247 ஏக்கரில் உருவாகியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கும் அவசரசிகிச்சைப் பிரிவும் உள்ளது. இது தவிர டயாலிசிஸ் பிரிவு, அல்ட்ரோசோனோகிராபி சிகிச்சை முறை, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ உள்ளிட்ட நவீந பரிசோதனை முறைகளும் உள்ளன. அம்ரித் மருந்துக்கூடம், ஜன் அவுசதி மையம், ஆயுர்வேத மருத்துவத்து சிகிச்சைக்காக 30 படுக்கைகளும் உள்ளன.
இதையும் கவனியுங்கள்: இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர்-கமலஹாசன்
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பூர்வீகக் குடிகள், பழங்குடியினர் ஆகியோருக்கு டிஜிட்டல் சுகாதார மையத்தையும் மருத்துவமனை அமைத்துள்ளது. போக்குவரத்து தொடர்பு இல்லாத மலைப்பகுதியான காசா, சலூனி, கெய்லாங் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை வழங்க தனியாக சிறப்பு பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக் கல்லூரியில் 100 மாணவர்கள் மருத்துவப்ப டிப்புக்கும், 60 மாணவர்கள் நர்ஸிங் பிரிவுக்கும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதைபோன்று, 1,264 கோடி ரூபாய் செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், அதன்பிறகு பணிகளில் வேகமில்லை. பெரும் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த 2019 ஜனவரி மாதம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதன் பிறகும் பணிகள் முடங்கின. தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் நட்டா, மதுரை எய்ம்ஸ் 95% கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டதாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற ஆன்மீகம், ஜோதிடம், கல்வி, தமிழ் இலக்கியம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.