எனது வெற்றிக்கு பிரதமர் மோடி காரணமில்லை-கௌதம் அதானி

0
19

எனது வெற்றிக்கு பிரதமர் மோடி காரணமில்லை. பிரதமர் மோடியும் நாணும் ஓரே மாநிலத்தை சார்ந்தவர்கள் என்ற ஓரே காரணத்தால் அதானி குழமம் வளர்ச்சி அடைந்ததற்கு அவர் காரணம் என்பது தவறு.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் இருந்து வருபவர் கௌதம் அதானி. இவர் இந்தியாவின் மிக முக்கிய தொழில் திட்டங்களில் வளர்ச்சி பெற்றுள்ளார். இவர் மின்சாரம், துறைமுகம், எரிவாயு, விமான நிலையம் என அனைத்திலும் தடம் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில், கௌதம் அதானியின் வளர்ச்சிக்கு இந்திய பிரதமர் மோடியே முக்கிய காரணம் என பலவிதங்களில் செய்திகள் விமர்சனங்கள் குற்றச்சாட்டுகளும் பரவி வந்தது. இது போன்ற குற்றசாட்டுகளுக்கு இதுவரை மௌனம் காட்டி வந்த கௌதம் அதானி தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.

எனது வெற்றிக்கு பிரதமர் மோடி காரணமில்லை-கௌதம் அதானி

இந்திய பாரத பிரதமர் மோடியும் நாணும் ஓரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற ஓரே காரணத்தால் பிரதமர் மோடியால் அதானி குழுமம் வளர்ந்து விட்டது என்று தவறான செய்திகளை பரப்புகிறார்கள். சொல்லப் போனால் ராஜூவ் காந்தி காலத்திலேயே தான் எங்கள் வளர்ச்சி தொடங்கியது. எனவே அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு வெவ்வேறு காலத்தில் இருந்து அரசியல் தலைவர்கள் கொண்டு வந்த அரசியல் சீர்திருத்தத்  திட்டங்களே காரணமே தவிர, எந்த ஓரு தனிப்பட்ட தலைவரும் காரணமில்லை என அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் போலவே துறைமுகம், விமான நிலையங்கள், மின் உற்பத்தி என பல அரசு துறை சார்ந்த திட்டங்களில் பெரும்பாலும் அதானி இடம் பெற்றிருப்பார். அதில் பலவற்றிலும் அதானிக்கு சாதகமாகவே முடிவுகளும் இருக்கும். இதுவே இந்த விமர்சனங்களை இன்னும் அதிகமாக்கியது என்றும் கூட கூறலாம்.

இதையும் படியுங்கள்: இந்தியாவிற்கு ஆதார் போல் தமிழ்நாட்டுக்கு மக்கள் ஐடி அறிமுகம்

தற்போது, இது போன்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள கௌதம் அதானி எனது வெற்றிக்கு எந்த ஓரு தனிப்பட்ட அரசியல் தலைவர்களும் காரணம் இல்லை என்பதை முதன் முறையாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here