கர்நாடகாவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

0
16

ஹெலிகாப்டர்: கர்நாடக மாநிலம் தும்குருவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். கர்நாடகா சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நாளை கர்நாடகா செல்கிறார். அங்கு நாளை காலைர மாதவரா அருகில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் இந்திய எரிசக்தி வார விழாவை தொடங்கி வைக்கிறார்.

பிற்பகலில் தும்குரு மாவட்டம் குப்பி தாலுகா பிதரஹள்ளி கிராமத்தில் உள்ள இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணி்க்கிறார்.

pm modi inaugrate helicopter factory in karnataka's thumkuru on tomorrow

615 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தொழிற்சாலைக்கு கடந்த 2016ம் ஆண்டு மோடி அடிக்கல் நாட்டினார். 615 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தொழிற்சாலையில் 3 டன் முதல் 15 டன் எடை வரை உள்ள 1000 ஹெரிகாப்டர்களை அடுத்த 20 ஆண்டுக்குள் ரூ.4 லட்சம் கோடி மதிப்பில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்களும் அதை தொடர்ந்து 60 மற்றும் 90 ஹெலிகாப்டர்கள் வரை தயாரிக்க எச்ஏஎல் முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here