சிவிங்கி புலி: சிவிங்கி புலிகள் இந்தியாவில் வாழ்ந்த பழமையான உயிாினமாகும். ஆனால் கடந்த 1952 ம் வருடம் இந்தியாவில் வாழ்ந்த சிவிங்கி புலிகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக ஒன்றிய அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்தது. சிவிங்கி புலிகளின் இனத்தை காப்பாற்ற கடந்த 2009 ம் ஆண்டு நமீபியாவில் இருந்து 3 ஆண், 5 பெண் சிவிங்கி புலிகளை இந்தியா கொண்டுவர திட்டமிடப் பட்டிருந்தது. அதன் படி சிறப்பு சரக்கு விமானம் மூலமாக 8 சிவிங்கி புலிகள் மத்திய பிரதேச மாநிலம் குவாலியருக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.
அங்கிருந்து 2 ஹெலிகாப்டா்கள் மூலம் சியோப்பூாில் உள்ள குனோ உயிாியல் பூங்காவிற்கு அவைகள் கொண்டு வரப்பட்டன. பிரதமர் மோடி அவா்கள் தனது பிறந்தாநாளை முன்னிட்டு கூண்டில் இருந்து புலிகளை பூங்காவிற்குள் திறந்து விட்டார். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் கால் பதித்த சிவிங்கிப் புலிகளை பிரதமர் மோடி அவா்கள் மேடையின் மேலிருந்தபடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தாா். இவற்றின் கழுத்தில் ரேடியோ காலா் பொருத்தப்பட்டுள்ளதால் புலிகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும் இவற்றின் பாதுகாப்பிற்காக பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிவிங்கிப் புலிகளை திறந்து விட்டு மோடி அவா்கள் பேசுகையில் ‘1952 ம் ஆண்டிலேயே சிவிங்கிப் புலிகள் அழிந்துவிட்ட நிலையில் அவற்றை மீண்டும் கொண்டு வர எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது புதிய வீரியத்துடன் சிவிங்கிப் புலிகள் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. சிவிங்கிப் புலிகளை வழங்கிய நமீபியாவிற்கு நன்றி’ என்று கூறினாா். பின்னர் உயிாியல் பூங்காவில் சிவிங்கிப் புலிகளை பராமரிக்க உள்ள ஊழியர்களுடன் பிரதமர் மோடி அவா்கள் கலந்துரையாடினாா்.