புதிய நாடாளுமன்ற மேற்கூரையில் வெண்கலத்தால் ஆன இந்திய தேசிய இலச்சினையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்திய தேசிய சின்னத்தில் உள்ள நான்கு சிங்கங்கள் நாட்டின் அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை என்ற பண்புகளை குறிக்கிறது. பீடத்தின் கீழே தேவநாகரி எழுத்தில் ‘சத்யமேவ ஜயதே’ தமிழில் (வாய்மையே வெல்லும்) என்ற வாசகம் நிறுவப்பட்டிருக்கும்.
இந்த தேசிய சின்னம் ஜனவரி 26 1950 ஆம் ஆண்டு செயற்பாட்டிற்கு வந்தது. இந்திய அரசின் கடிதங்களிலும், கடவுச்சீட்டுகளிலும், POSSPORT இந்திய நாணயங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புதுடெல்லியில் 100 ஆண்டுகளான பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டிடம் உள்ளது. இந்நிலையில், மிகவும் பிரம்மாண்டமான முறையில் புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு 970 ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் கட்டப்பட்டு வருகிறது. சென்டரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் டாடா நிறுவனத்தால் முக்கோண வடிவில் நான்கு மாடி கட்டிடமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 75 வது சுகந்திர தினத்திற்கு முன்னதாக திறக்கத் திட்டமிட்டப்பட்டது. கட்டுமான பணிகள் விருவிருப்பாக நடைப்பெற்று கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
14 நபர்களை கொண்ட பாரம்பரியத்தை பாதுகாக்க குழுவும் நியமிக்கபட்டது இந்த நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் மோடி இன்று காலை திறந்து வைத்தார். இதற்காக நடைபெற்ற பூஜைகளிலும் முன்னதாக பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.