இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்த இந்திய பிரதமர் மோடி அணிந்திருந்த ஓவர் கோட் அனைவரையும் கவர்ந்தது அதிலும் அந்த கோட் ஓருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எரியும் பிளாஸ்டிக் பாட்டில்களிருந்து செய்யப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ந் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. அதில் இந்திய நாட்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றி தொடங்கி வைத்தார். இந்நிலையில், அவருக்கு நன்றி தெரிவிக்கம் விதமாக நாடாளுமன்ற இறுதி கூட்டத் தொடரான இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி அவர்கள் எப்போதும் ஓவர் கோட் அணிந்து வருவது வழக்கம் என்றாலும் இன்று அணிந்து வந்த நீல நிற ஓவர் கோட் சிறப்பு வாய்ந்தது. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்பட்ட நீல நிற ஓவர் கோட்டை இன்று அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சமீபத்தில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த இந்திய எரிசக்தி வார விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் இந்த கோட்டை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியது. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வுக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஆடை பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது குறிப்படத்தக்கது.
இந்த கோட் முற்றிலும் தமிழ்நாட்டின் கரூரில் உள்ள ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களை ஃபைபராக தயாரித்து, அதனை துணியாக மாற்றி 9 வண்ணத்தில் துணிகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு அனுப்பியது. பின்னர், பிரதமர் மோடியின் டைலருக்கு துணி அனுப்பட்டது. அதனை டைலர் சிறந்த கோட்டை தயார் செய்து வழங்கியுள்ளார்.
இந்த கோட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: பிப்ரவரி 14: ‘Cow Hug Day’ – இந்திய விலங்குகள் நல வாரியம் சுற்றறிக்கை!
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.