பாபா படத்தின் ‘சக்தி கொடு’ பாடல் குறித்து பேசிய கவிஞர் வைரமுத்து. 2002ம் ஆண்டு கதை, தயாரிப்பு பணிகளை ரஜினி தானே மேற்கொண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் பாபா.
தமிழ் உலகில் எண்ணற்ற பாடல்களை திரைப்பட பாடல்களை பாடி பெயர் பெற்றவர் கவிபேரரசு வைரமுத்து. இவர் எழுதிய கள்ளிகாட்டு இதிகாசம் சாகெத்ய அகாடமி விருது பெற்றது நாம் அறிந்ததே. இவரின் தமிழ் பேசும் குரல் வளமும் தமிழ் பற்றும் அனைவரையும் கவர்ந்ததே அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி எழுதி தயாரித்த படமான பாபா படத்தில் சக்தி கொடு என்ற பாடல் வரிகளை பற்றி வைரமுத்து பேசியுள்ளார்.
பாபா திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல், காதல், ஆன்மீகம், நகைச்சுவை என அனைத்தாலும் ஆன கதைக்களமாக அமைந்திருக்கும் அதற்கேற்ப பாடல் வரிகளை அமைக்க வேண்டிய கட்டாயம் பாடல் வரிகளை எழுதும் கவிஞராகிய எனக்கு அவசியம்.
ரஜினி போன்று பெரிய ஸ்டாருக்கு எழுதும் வரிகள் வாயிலாக பல பாராட்டுகளும் பல சிக்கல்களும் இருக்கதான் செய்யும் அதற்கு தகுந்தார் போல வரிகளை எழுத வேண்டியது கட்டாயம்.

”சக்தி கொடு பாடலில் ஓரு வரி நான் ஏணியாய் இருந்து ஏமாற மாட்டேன் ஓரு போதும் நான் இருந்தால் தமிழ்நாடு தான் என வரும்” இந்த வரிகளை கேட்ட அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞரை சந்திக்க போயிருந்த போது அவர் என்னிடம் ஓரு கேள்வி கேட்டார் பாபா படத்தில் சக்தி கொடு என்று ஓரு பாடல் வரும் அந்த பாடல் வரிகளை எழுதியது யார் என்று நான் தான் எழுதியது என்று ஓப்புக் கொண்டேன். சரி ரஜினி இது போன்ற வரிகளை எழுதச் சொன்னாரா என்றார்.
நான் சொன்னேன் அப்படி எதுவும் சொல்லவில்லை அந்த காட்சிக்காக நான் தான் அந்த வரிகளை எழுதினேன் அதை கேட்டுவிட்டு சரி என்றார்கள் அவளவு தான் என்றேன். உடனே கலைஞர் அரசியல் பற்றியெல்லாம் மெல்ல மெல்ல பேசுகிறாரே நமக்கு அவரது ஆதரவை தரமாட்டாரா என்றார்.
ரஜினிகாந்த் பணத்தை இழந்ததுண்டு, உடல்நலத்தை இழந்ததுண்டு, தூக்கத்தை இழந்ததுண்டு, மன வலிமையை இழந்ததுண்டு ஆனால் எப்போதும் இழக்காதது ரசிகர்களின் அன்பை மட்டுமே என்று கூறி வெளியேறினார் வைரமுத்து.
இதையும் படியுங்கள்: பாட்ஷா படபாடலில் ரஜினி குறித்து மனம் திறந்த தேனிசைத் தென்றல் தேவா
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.