இலவச டேட்டா தருவதாக வரும் குறுஞ்செய்தியை நம்பவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக கால்பந்து போட்டி நடப்பதை வைத்து மோசடி கும்பல்களால் தீட்டப்பட்ட வலைகளில் சிக்காதீர்கள்.
பிபா உலக கோப்பை போட்டிகள் கத்தாரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டங்களை விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர். பல முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணிகளுக்கே டப் கொடுத்து வருகின்றனர்.
உலக அளவில் பெரும் மதிப்பும் பெரும் ரசிகர்களின் பட்டாளங்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. கத்தாரில் மிக பிரம்மாண்டமான முறையில் தொடங்கி நடைபெறறு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் அர்ஜென்டினா வீரரின் மெஸியின் அணியை முதன் முதலாக சவூதி அரேபியா தோல்வியுறச் செய்தது. சவூதி அரேபியா வெற்றி பெற்றதை அந்த அரசு ஓரு நாள் பொது விடுமுறை அளித்து கொண்டாடி வந்தது.

தற்போது, நான்கு முறை சாம்பின்ஸ் பட்டத்தை வென்ற ஜெர்மன் அணியை ஜப்பான் அணி வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. உலகின் முதல் கோல் கீப்பர்களில் ஓருவரான நோயரை வியக்க வைத்து கோல் போடப்பட்டது. முதல் முறையாக நேருக்கு நேர் மோதிய இப்போட்டியில் ஜெர்மன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது.
இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண இலவசமாக 50 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக இணையதளங்களில் லிங்க் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. இந்த லிங்கை பயன்படுத்துபவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: உலக கால்பந்து போட்டியால் IFIFA விற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா
இதையடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண இலவச 50 ஜிபி டேட்டா தருவதாக சமூகவலைதளங்களில் வரும் பதிவுகளை நம்ப வேண்டாம் சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 50 ஜிபி டேட்டா தருவதாகக் கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி, எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.