அகிலன்: ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘அகிலன்’. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து ‘பூலாேகம்’ படத்தை இயக்கிய கல்யாண் இப்படத்தை இயக்கியுள்ளார். துறைமுகம் பின்னணியில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் பணிபுரியும் தொழிலாளராக ஜெயம் ரவி நடித்துள்ளார். மேலும் இதில் இவர் கடற்கொள்ளையனாக எதிர்மறையான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஒரு சர்ப்ரைஸான கதாபாத்திரத்தில் தான்யா நடித்திருக்கிறார்.
இந்த படம் வரும் மார்ச் 10ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படத்தை சென்சாருக்கு படக்குழு அனுப்பியது. இதில் இடம் பெற்ற சில அரசியல் வசனங்களுக்கும் சில காட்சிகளுக்கும் சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த காட்சிகளும் வசனங்களும் நீக்கப்பட்டன. படத்தில் இடம்பெறும் 2 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. அரசியல் வசனம் தவிர சில காட்சிகளில் வன்முறை அதிகம் இருந்ததால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டதாக சென்சார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.